December 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை: ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பியுடனும் முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம் – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை அறிவிப்பு

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்துவோம். அத்துடன் எதிர்வரும் 23ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே ...

மேலும்..

பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால்மரணம் எண்ணிக்கை அதியுச்சமடையும் – தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு எச்சரிக்கை

பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எதிர்காலம் தீர்மானிக்கப்படும். எனவே, சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் பரவல் எமது கட்டுப்பாட்டைமீறி, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் உருவாகக்கூடும். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதியுச்சமடையும்." - இவ்வாறு தொற்றுநோய் ஆய்வுப் ...

மேலும்..

மலையகத்தில் அரச பெருந்தோட்டங்களின் கீழுள்ள காணிகளை வெளியாருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது -வேலுகுமார்

மலையகத்தில் அரச பெருந்தோட்டங்களின் கீழுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லில் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில்  ஆட்டம், பாட்டத்துக்கு கட்டுப்பாடு !

ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில்  மீண்டும் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பாடுபட்டு வரும் வேளையில், நேற்று முதல்  அங்கு செயல்பாட்டுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள் உள்ளரங்க இடங்களில் நடனம், பாடுதல், ஓதுதல் ஆகிய நடவடிக்கைகளைத் தடை செய்கிறது. சிறிய ...

மேலும்..

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா – மருதனார்மடம் கொத்தணியின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 120 பேருக்கு இன்று (20) ...

மேலும்..

உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வைப்பதற்கு, 5 இடங்களில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்.

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr.அசேல குணவர்த்தன ஆங்கில இணையத்தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேதஅறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவிப்பு

இதுவரை யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவி தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைத் ...

மேலும்..

சேனா படைப்புழுவின் பாதிப்பு மதிப்பீடு செய்ய விவசாய திணைக்களம் நடவடிக்கை

சேனா படைப்புழுவினால் சோள உற்பத்திக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயம் W.M.W வீரகோன் இது தொடர்பாக தெரிவிக்கையில் மதிப்பீடுகள் தொடர்பாக பிரதேச விவசாய அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது ...

மேலும்..

4 இந்தியர்களுடன் ரோலர் படகு கடற்படையினால் பொறுப்பேற்பு

இலங்கை கடற்படையினரினால் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டின் கடல் எல்லைப் பகுதிக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 4 இந்தியர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரோலர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கொவிட் தொற்று காரணமாக அழுத்தத்திற்கு ...

மேலும்..

துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை – அமைச்சர் சி.பி. ரத்னாயக்க

போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது என்றனர், ஆனால் ராஜபக்சக்கள் அதனை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதேபோல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையையும் ராஜபக்சக்களே மாற்றியமைத்தனர் என்று அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக ...

மேலும்..

கல்முனை பிரச்சினையை தீர்க்காமல் புரியாணி சாப்பிடுகிறார்கள், உல‌மா க‌ட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடல் …..

தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சுமந்திரன் எம்.பி போன்றவர்கள்  கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும் என    உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

நாட்டில் 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பற ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் ...

மேலும்..

திருகோணமலையில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் கடும் அடை மழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கின!

கடும் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதில் நேற்று இரவு முதல்(19) காலை வரையான அதிக மழை வீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதில் கிண்ணியா, ...

மேலும்..

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் -டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படின் கடற்றொழில் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை ...

மேலும்..

வவுனியா குட்செட் அம்மாபகவான் வீதி மக்கள் குடியிருக்கும் காணிகளை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை…

வவுனியா, குட்செட், அம்மாபகவான் வீதி மக்கள் தாம் குடியிருக்கும் குளத்தின் அலகரையை அண்டியுள்ள காணிகளை தமக்கே பெற்றுத் தருமாறு கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். வவுனியா, குட்செட் அம்மாபகவான் வீதிப் பகுதிக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா ...

மேலும்..

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட மாகாணசபை நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்: அமைச்சர் டக்ளஸ்…

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு மாகாணசபை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தமிழ் தலைமைகள் தான் காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் தமிழ் தேசிய கட்சிகளின் தீர்வு திட்ட தயாரிப்பு ...

மேலும்..

கல்முனையில் கொட்டும் மழையிலே கவனயீர்ப்பு போராட்டம்…

ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான வெஸ்டர் ஏ. எம். றியாஸின் ஏற்பாட்டில் கல்முனை அமானா வங்கி சுற்றாடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

கல்விக்கு கை கொடுப்போம் மாணவர்களுக்கு உதவிக்கரம் !

தென்ராட்சி சேவை நிறுவனத்தின் (கனடா) தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி,ஆயுட் கால ஆலோசகரும் சமூக சேவையாளருமான வி.சு.துரைராஜா, சிரேஷ்ட உபதலைவரும் தொழில் அதிபருமான தேவதாஸ் சண்முகலிங்கம், சர்வதேச இணைப்பாளரும் நிறுவுனருமான இராசரட்ணம் சத்தியசீலன் ஆகியோரின் அனுசரணையுடன் தென்மராட்சி சேவை நிறுவனத்துடன் (கனடா) ...

மேலும்..

மத்திய அதிவேக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும்-மஹிந்த ராஜபக்ச

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.12.19) தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு!

ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன. வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனாதொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை ...

மேலும்..

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..!

அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 28ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக 29 லட்சம் பேருக்கு ...

மேலும்..

முஸ்லிம் மக்களுடைய உரிமையை மறுப்பது அடிப்படை உரிமை மீறல்! ஜனாஸாக்கள் எரிப்பதற்கு எதிராக தமிழ்த் கூட்டமைப்பு கண்டனம்

முஸ்லிம் மக்கள் தங்கள் மதக் கொள்கைகளுக்கு அமைய இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான உரிமை மீறல்கள் தொடரக் கூடாது எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் ...

மேலும்..

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் வீரர்கள் கௌரவிப்பு!

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணம் சார்பில் யப்னா ஸ்ரலியன்ஸ் அணிக்காக பங்கு கொண்ட வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று(19) இடம்பெற்றது. தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் யாழ் துடுப்பாட்ட சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சி அரியாலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கொரோனா ...

மேலும்..

முல்லைத்தீவு விபத்தில் மூவர் பலி

முல்லைதீவு – மல்லாவி பகுதியில் அமைந்துள்ள வவுனிக் குளத்தில், வீழ்ந்த கெப்ரக வாகனத்தில் உயிரிழந்த மேலும் இருவரது சடலங்கள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 13 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை, சகோதரி ஆகியோர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு சிறுவன் தப்பியுள்ளார். கப் ரக ...

மேலும்..

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்க வேண்டும் – மாஸ்க் பிரபாகர் தெரிவிப்பு

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை அடகு வைக்கும் அரசியல் தலைமைகளை மலையக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையத்தின்  இணை அமைப்பாளர் மாஸ்க் பிரபாகர் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் ஜனவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டம் ...

மேலும்..

விக்கியும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம்! – சுமந்திரன் காட்டம்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ...

மேலும்..

டிசம்பர் 26ஆம் திகதி விமான நிலையம் திறப்பு! – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன அறிவிப்பு…

"சுற்றுலாப் பயணிகளுக்காக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் விமான நிலையம் திறக்கப்படும். முன்னோடி திட்டமாகவே இந்த நடவடிக்கை அமையும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான திட்டம் குறித்து ஜனவரி நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்." - இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...

மேலும்..

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இன்று 20/12/2020 இடம்பெற்றது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் ...

மேலும்..