December 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுகு (sugu) லண்டன் அவர்களின் உடற்பயிற்சி (KARAITIVU FITNESS CLUB) நிலையத்தை திறந்து வைத்தார் – பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்…

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள போதிலும் ஆரோக்கியமில்லாத மனிதர்கள் மரணித்து கொண்டு இருக்கின்றார்கள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரிவு 11 இல்  நவீன மயப்படுத்தப்பட்ட புதிய உடல் பயிற்சி நிலையத்தை  ...

மேலும்..

கொரோனா -மேலும் 415 பேர் குணமடைவு….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 415 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். நேற்றையதினம் (20) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 592 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 253 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும், கண்டி மாவட்டத்தில் 62 பேரும், அடையாளம்) இன்று (21) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய ...

மேலும்..

பொத்தானை அணைக்கடினை உடைத்து நீர் செல்வதால் ஐயாயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு..

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து ...

மேலும்..

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பற ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், பதுளை ...

மேலும்..

தீர்வின்றி முடிந்தது 1000 ரூபா சம்பள பேச்சுவார்த்தை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (21) தொழில் அமைச்சில் நடைபெற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தினால் ...

மேலும்..

மட்டக்களப்பு -தாளங்குடாவில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் சக்திவாய்ந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.   ஆரையம்பதி தாளங்குடா கடற்கரை வீதியில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றை இன்று (21) கூலித் தொழிலாளியொருவர் ...

மேலும்..

கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

கொரோனா தொற்று அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன், இந்த வியடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அவதானம் செலுத்தப்பட ...

மேலும்..

கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைவதாக பாலமுனை மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல்….!

பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் உள்ள ...

மேலும்..

லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் !

லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் இன்று (21.12.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும், அக்கரப்பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று அடையாளம் ...

மேலும்..

திருகோணமலையில் 3கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தை தொடர்ந்து திருமலை நகரில் முருகாபுரி, ஜின்னானகர், அபயபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு ...

மேலும்..

செல்வி (Aksha) அவர்களுக்கு 17 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

யாழ்ப்பாணம்  -சாவகச்சேரி பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட  செல்வி அக்ஷயா( aksha) அவர்கள் தனது 17 ஆவது  பிறந்த தினத்தை இன்று (21/12/2020)  கனடாவில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.   செல்வி  அக்ஷயா( aksha) இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் ...

மேலும்..

காரைதீவில் நோய் எதிர்ப்பு மூலிகை பொதிகள் வழங்கி வைப்பு !

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முகமாக காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எம். சி. எம். காலித் அவர்களினால் ஆயுர்வேத மருந்தகத்தில் பொதுமக்களுக்கு ஒரு தொகை மூலிகை பொதிகள் வழங்கி இன்று (21) வழங்கி வைக்கப்பட்டன. ...

மேலும்..

நாடு முழுதும் மதுபான கடைகளை மூட கோரிக்கை!

எதிர்வரும் பண்டிகை நாட்களிலும் அதேபோல புதுவருடப் பிறப்பு தினத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக்கடைகளை மூடுவதற்கு அறிவிக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. அரசாங்கம் இந்த தீர்மானத்திற்கு வராவிட்டால் பண்டிகை நாட்களிலும், வருடப் பிறப்பிற்குப் ...

மேலும்..

வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல்- ஒருவர் கைது

வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இரு ...

மேலும்..

நேற்றைய தினம் 594 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டனர்

நேற்றைய தினம் பதிவான 594 தொற்றாளர்களும் 16மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டனர் அவைகளின் விபரங்களும், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் எந்த எந்த பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற விபரங்களும், ஏனைய 09 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்,

மேலும்..

ஒருஇலட்சம் வேலைவாய்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் நேர்முகப்பரீட்சை ஆரம்பம்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. ...

மேலும்..

பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் குறித்த விஷேட அறிவிப்பு….

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் ...

மேலும்..

பண்டிகை காலத்தில் சுற்றுலா செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு புதிய அறிவிப்பு …

பண்டிகை காலத்தில் நுவரெலியாவுக்குச் சுற்றுலா செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி சுற்றுலா செல்பவர்கள் தாம் கொரோனா அவதானமிக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக அவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் சான்றிதழ் ஒன்றை பெறுவது கட்டாயமாகுமென, நுவரெலியா மாவட்டச் ...

மேலும்..

வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் !

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையே மழை ...

மேலும்..

யாழ்மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி…

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு ...

மேலும்..

வவுனியாவில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட           வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் ...

மேலும்..