December 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாஸா எரிப்புக்கு எதிரான   கவனயீர்ப்பு போராட்டம்  அம்பாறை மாவட்டம்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின்  ஏற்பாட்டில்  சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலைக்கு அருகாமையில் இன்று  (24) மதியம்  இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின்  போராட்டமானது ...

மேலும்..

ஆவரங்கால் சமுர்த்தி வங்கி அங்கஜன் எம்.பியால் கணனி மயப்படுத்தி வைப்பு !

யாழ் மாவட்டத்தில் முன்னோடியாக திகழ்ந்த ஆவரங்கால் சமுர்த்தி வங்கி உத்தியோக பூர்வமாக கணனி மயப்படுத்திப்பட்டு பாவனையாளர் மயப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வினை செயற்பாட்டு ரீதியாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்  இன்று (24) ...

மேலும்..

கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் !

கொவிட் வைரஸின் புதிய வடிவத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வைரஸ் பற்றி கூடுதல் தகவல்களை அறியவேண்டி இருப்பதாக ஸ்தாபனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான பிரதிநிதி ஹான்ஸ் குளுக் தெரிவித்தார். இத்தகைய தகவல்கள் கிடைக்கும் ...

மேலும்..

திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண

பண்டிகைக்காலம் ஆரம்பமானதைத்தொடரந்து குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இதனால் இந்த பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது குற்றவாளிகள் மற்றும் திருடர்களிடமிருந்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பணம் ...

மேலும்..

பீலேவின் சாதனையை மெஸ்சி 644 கோல்கள் பெற்று முறியடிப்பு

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7ஆவது வெற்றியை பெற்றது. 65ஆவது ...

மேலும்..

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பில் அடுத்த ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள்

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் ஐந்து புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தினூடாக இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நேற்று (23) ...

மேலும்..

யாழில் “பிரஜா ஹரித்த அபிமானி“ மரநடுகை நிகழ்வு

நீர்வழங்கல் அமைச்சினால் ஆலோசிக்கப்பட்ட “பிரஜா ஹரித்த அபிமானி” 2020 திட்டத்திற்கு அமைவாக மரநடுகை நிகழ்வானது தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் இன்றை தினம் (24) யாழ்ப்பாண மாதகல் நீர்ப்பாவனையாளர் சங்க வளாகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் ...

மேலும்..

‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ தொனிப்பொருளில், 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானம் .

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்களை அமைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறியமக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் 3200 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். பின்தங்கிய ...

மேலும்..

நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று (24) மேலும் 686 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 30,568 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, ...

மேலும்..

அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது. மேலும், பண்டிகைகாலத்தில் சட்டவிரோதமாக பதுபான விற்பனையில் ஈடுப்படும் நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கென மதுவரித்திணைக்களம் மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பில் சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். இதனைக் கட்டுப்படுத்த விவசாய ...

மேலும்..

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்கச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை ...

மேலும்..

வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்பு

வெடிக்காத நிலையில்    காணப்பட்ட  லோஞ்சர் ரக  குண்டு ஒன்று   மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  திருக்கோவில்   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    கஞ்சிக்குடிச்சாறு   பிரதேசத்தில் கடந்தபுதன்கிழமை(23) மதியம்  பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய    காணி ஒன்றில் இருந்து   ...

மேலும்..

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கடல் பரப்பில் நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கல்!

அம்பாறை மாவட்டம்   திருக்கோவில் பிரதேசத்தில் அதிகளவில் கலப்பு மீன்கள்  இரு தினங்களாக   கடற்கரையில்  இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. இப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையின் பின்னர்  கடந்த புதன்கிழமை(23) இருந்து   இவ்வாறு  இறந்த நிலையில் கலப்பு ...

மேலும்..

மட்டக்களப்பில் பருவ மழை   காரணமாக அதிகளவான மீன்கள்!

மட்டக்களப்பு  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள பிள்ளையாரடி பகுதியில்   வடிந்தோடும் வெள்ள நீரில்   சிறு மீன் முதல் பெரிய மீன்கள் ...

மேலும்..

55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்டகாலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 வரை அதிகரித்த போதிலும்;, 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமையை ...

மேலும்..

வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்

ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிவித்தலின் நகல் மேலதிக ஆலோசனைகளுக்காக சட்டமா ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு கடிதம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளார். இன்று(24) அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவின் உள்ள திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீநகர், கற்குழி மற்றும் தேக்கவத்தை ...

மேலும்..

பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான்கதவுகள் திறப்பு

பொலநறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் ;நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் அடி அளவிற்கு உயர்ந்திருப்பதாக பொலநறுவை வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.கே.ஹேவாகம தெரிவித்துள்ளார். இதனால் ...

மேலும்..

அம்பாறை, மாவட்டத்தில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின : மீன்பிடிக்கும் மீனவர்கள்.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச வயல் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் ...

மேலும்..

20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்சமன்றில் மனு!

கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். தங்களது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் வைத்திய அறிக்கையை பெற்று விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் ...

மேலும்..

காங்கேசன்துறைக்கு கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விஜயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை ...

மேலும்..

மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரையில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

மேல் மாகாணத்தில் இதுவரையில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 875 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 183 பேரும், களுத்துறை மாவட்டத்தில் ...

மேலும்..

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தொழிற்சாலைக்கு பூட்டு

வட்டவளையில்  அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (23.12.2020) மாலை வெளியாகிய பி.சி.ஆர் அறிக்கையில் நான்கு ஆண்கள் ஆறு பெண்களுமாக ...

மேலும்..

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு 24.12.2020 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபோது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் ...

மேலும்..