December 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகங்களை ஒடுக்குவதில் முழுமூச்சுடன் ராஜபக்ச அரசு சர்வாதிகார ஆட்சியின் உச்சம் என்கிறார் அநுரகுமார…

"ஊடகங்களை ஒடுக்குவதில் ராஜபக்ச அரசு முழுமூச்சுடன் செயற்படுகின்றது. இது சர்வாதிகார ஆட்சியின் உச்சக்கட்டத்தை வெளிக்காட்டுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பிரபாகரனின் பெயரை ...

மேலும்..

கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி – சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை…

"2021ஆம் ஆண்டிலாவது கோட்டாபய அரசு திருந்த வேண்டும். நாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

விளையாட்டு உபகரணம் வழங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…

கனகபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக் கழக நிர்வாகம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனிடம் விடுத்த வேண்டுகோளுகிணங்க கழகத்தின் பதினாறு வீரர்களுக்கான உதைபந்தாட்ட காலணிகள் தவிசாளராலும் மற்றும் சீருடைக்கள் ஜெயக்குமார் அவர்களாலும் ஒழுங்கு படுத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் இரவு இரவாக எடுக்கப்படும் எழுமாற்றான கொரோனா பரிசோதனைகள்…

கொரேனா நிலைமையை கல்முனை மாநகர எல்லைப்பகுதியில்  கட்டுப்படுத்தும் வகையில் எழுமாற்றாக எடுக்கப்பட்ட  பரிசோதனையில்   அதிகமான  கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தொற்றாளர்களை இணங்காண்பதற்காகவும்  பொது இடங்களில் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் இராணுவத்தினரின் ...

மேலும்..

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் வெளிமாவட்டவர் கலந்து கொண்ட ஐயப்பன் மண்டல பூஜை : சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை…

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட  மண்டல பூஜை சுகாதார பிரிவினரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று (28.12.) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கார்த்திகை மாதம் ஐயப்பன் ...

மேலும்..

கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்…

கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று(28)இரவு 8.30 மணியில் இருந்து ...

மேலும்..

(வீடியோ)ஜனாதிபதி அவர்களே மண்ணால் படைக்கப்பட்ட எம்மை மரணித்த பின்னர் இந்த மண்ணில் அடக்குவதற்கு அனுமதி தர வேண்டும்

https://www.youtube.com/watch?v=taHq-4OhuH4&feature=youtu.be பௌத்த மக்களின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இந்த அரசாங்கமானது ஏன் அரசியல் செய்கின்றது என ஜசாஸா எரிப்பிற்கு எதிராக மகனுடன்  நடைபயணம் மேற்கொண்ட கல்முனை நபர் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(28) தனது நடைப்பயணம் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும்..

சிவனொளிபாதமலைக்கு புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு

2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை  29.12.2020 அன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி புனித சின்னங்களை  எடுத்துச்செல்லும் நிகழ்வு  இன்று (28)இடம்பெற்றது. இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக 28.12.2020 அன்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக சிவனொளிபாதமலை ...

மேலும்..

( வீடியோ) மொழி, மதம், அபிவிருத்தி,தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்

நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் வாழவில்லை. தமிழ், முஸ்லிம், பறங்கியர்களும் இருக்கின்றனர். எனவே எல்லோருக்கும் பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என்று விநயமாக கேட்டு கொள்கின்றோம். சகல மக்களையும் சமத்துவமாக மதியுங்கள் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (28) மேலும் 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 33,221 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும்..

(நேர்காணல் )சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதனால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்தலாம்-கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன்

(நேர்கண்டவர் :- பாக்கியராஜா மோகனதாஸ்)   கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில், ஆளணி வளங்களே பிரதான பற்றாக்குறையாகவுள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருக்கின்றோம். சுகாதார ஊழியர்களை முதலில் பாதுகாப்பதன் பிற்பாடே சேவைகளை செய்ய முடியும். கொரோனா தொற்றுள்ள சாதாரண நபர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதி இருப்பதுடன் ...

மேலும்..

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற  இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார் அவருக்கு வயது 73.கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இன்று (டிசம்பர் 28) ...

மேலும்..

முள்ளிப்பொத்தானை ஜாமியா நகர் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கனத்த மழை காரணமாக தம்பலகமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப் பொத்தானை ஜாமியா நகர் வீதி வெள்ள நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீட்டினுள் நீர் உட்புகுந்துள்ளதுடன் விவசாய நிலங்கள் என பல பாதிப்புக்களை எதிர்நோக்குவதாகவும் ...

மேலும்..

வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் இன்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு!

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (28) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...

மேலும்..

நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்…

நேற்றைய தினம் (27) முதல் இன்று (28) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் புதிதாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. இவர்களில் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 06 பேர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காராணமாக 1911 குடும்பங்கள் பாதிப்பு -மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காராணமாக 1911 குடும்பங்களைச்சார்ந்த 6617 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 1104 குடும்பங்களின் 3849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1380 குடும்பங்களைச்சேர்ந்த ...

மேலும்..

ஜனாஸாக்களை எரிக்கும்படி பௌத்த தேரர்கள் கொழும்பில் போராட்டம்

கொரோனா வைரஸினால் இலங்கையில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரித்துவிடும்படி வலியுறுத்தி கொழும்பில் பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் அணிதிரண்டு பெருந்திரளான முன்னணி பௌத்த தேரர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தங்களது கோரிக்கை ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக 6 ஆவது முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு ...

மேலும்..

மின்னல் தாக்கிய வீடுகளுக்கு நஷ்டஈடு

கடந்த நவம்பர் மாதம் மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்குள்ளானவருக்கான முற்பண கொடுப்பனவாக 10,000/- க்கான காசோலை காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இன்று  (28) வழங்கி வைக்கப்பட்டது. மின்னல் தாக்கத்தினால் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் இவ்வாறு ஐந்து ...

மேலும்..

மட்டக்களப்பு -வெள்ளப் பெருக்கால் உடைப்பெடுத்த குளம் ; விவசாயிகள் பாதிப்பு …

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் விவசாய ...

மேலும்..

சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும்-இரா.சாணக்கியன்

சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட  கிழக்கில்  வலிந்து  காணாமல்  ஆக்கப்பட் ட  உறவுகளின்  சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த ...

மேலும்..

ஜனாஸா எரிப்புக்கு எதிராக தந்தையினதும் தனையனினதும் மனதை நெகிழ வைக்கும் கவனயீர்ப்பு நடைபாதை…

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை இன்று(28) திங்கட்கிழமை காலை  கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி சாய்ந்தமருது வரை சென்றது கொரோனாவினால் மரணமடைகின்ற முஸ்லிம்களின் ஜனஸாக்களை அநியாயமாகவும், ...

மேலும்..

யாழில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாபெரும் போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (28) காலை  முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை ...

மேலும்..

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி ...

மேலும்..