January 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்;நியாயம் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிஷாட் எம்.பி கடிதம்!

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் ...

மேலும்..

8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. இதன்படி, எஹலியகொட, பாணந்துரை மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. எஹலியகொட பொலிஸ் பிரிவு மின்னான கிராம உத்தியோகத்தர் பிரிவு போபத்எல்ல ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவின் பேரில் சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸா குடும்பத்தினரிடம் கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கடந்த 2020-12-21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸா, நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (15) இரவு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, சற்றுமுன் சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த நபர் கொரோனா வைரஸ் ...

மேலும்..

இந்தோனேசியாவில் 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பம்: 35 பேர் பலி: பலருக்கும் காயம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்காணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதன் சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் சுனாமி அலையைத் தூண்டக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. மஜேனே நகரின் ...

மேலும்..

Park & Ride’ பஸ் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட “Park & Ride” பஸ் சேவையின் முதல் கட்டம் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் நேற்று (15) ஆரம்பிக்கப்பட்டது. கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை! கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு..

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆண்டுக்கு முன்னரான ராஜபக்‌ச அரசின்போது வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் ...

மேலும்..

வடமாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை  திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி!

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை  எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நேற்று (15) தெரிவித்துள்ளார். கடந்த மாதம் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரம்பல் ...

மேலும்..

நினைவேந்தல் உரிமை மறுப்பு: மாபெரும் மனித உரிமை மீறல்! – ரணில்

போரில் இறந்தவர்களைத் தூபிகள் அமைத்து அல்லது நிகழ்வுகள் நடத்தி நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமைக்கு அனுமதி மறுப்பதற்கும் - அதைத் தட்டிப் பறிப்பதற்கும் எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அடிப்படை உரிமையை மறுப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும்." - இவ்வாறு ...

மேலும்..

சுயதனிமைப்படுத்தலில் அரச வைத்திய சங்க தலைவர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்தார் என உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார்.  

மேலும்..

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சியில்..

அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் அனைத்து மதங்களிற்குள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொங்கல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி செபமாலை செபஜீவன் தலைமையில் ...

மேலும்..

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!

புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் அவர் அதிகாரப்பூர்வ ...

மேலும்..