January 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களின் அடையாளங்களை அரசு சிதைக்க முயல்கிறது-சிறீதரன்

தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்ச அரசு சிதைத்து தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாகுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஜெயந்தி நகர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு நிகழ்வும் புலமைப் பரிசில் சித்தியடைந்த சாதனையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுநேற்று ...

மேலும்..

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் ...

மேலும்..

கல்முனை மனித உரிமை பிராந்திய இணைப்பாளராக ஏ.சி.அப்துல் அஸீஸ் நியமனம்

(பாறுக் ஷிஹான் ) அம்பாறை மாவட்டம், கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ.சி.அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இடமாற்றம் பெற்று வந்த இவர், கல்முனை, கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித ...

மேலும்..

ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு-சிவாஜிலிங்கம்

ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெராவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகமாக உள்ள  பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் ...

மேலும்..

அம்பாரை ஊடக மையத்தில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  

(றாசிக் நாபாயிஸ்) அம்பாறை மாவட்ட வீரமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாவட்ட குருக்கள்மடம் கிராமத்தை வசிப்பிடமாகவும் திருகோணமலை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தராகவும் இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்கள் 2006.01.24ஆம் திகதி திருகோணமலையில் வைத்து தனது ஊடகப்பணி நேரத்தில் படுகொலை ...

மேலும்..

திருகோணமலை-விவசாய நிலங்களுக்கான நீர்பாய்ச்சும் முறைமையை துரிதப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பீங்கான் உடைந்தாறு, வன்னியனார் மடு, புளியடிக்குடா போன்ற விவசாயப் பகுதிகளுக்கு தீர்ப்பாய்ச்சும் பிரதான ஆற்றை மறித்து சுமார் 2000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக இந்த ...

மேலும்..

பவித்ராவின் கணவருக்கும் கொரோனா! – மூடப்பட்டது அலுவலகம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனிமைப்படுத்தப்பட்ட ...

மேலும்..

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு – ஜே.வி.பி பூண்டுலோயா நகரில் போராட்டம்

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று (24) போராட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் தோழர் மஞ்சுள ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (23) மாலை மரணமடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஹேரத் (வயது 35) என்பவரே மரணமடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

ஆணைக்குழு ஏமாற்று வித்தை பொறுப்புக்கூறலை குழிதோண்டி புதைக்க இடமளிக்கவே முடியாது! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ஒரு ஏமாற்று வித்தையாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

மேலும்..

“பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்..

(க.கிஷாந்தன்) அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (24) போராட்டத்தில் ஈடுபட்டது. "பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்'  எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபில நாகன்தல ஏற்பாடு ...

மேலும்..

அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனன் கைது!

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவெவ-டி-06 பகுதியைச் சேர்ந்த 36வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது-மொரவெவ ,பம்மதவாச்சி ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்-மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று  (24) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் மட்டு  மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து  கிழக்கு ...

மேலும்..

டென்னிஸ் பந்தில் கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள்!

வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திலிருந்து நேற்று (23) இரவு குறித்த சிகிச்சை மையத்தில் எறியப்பட்ட டென்னிஸ் பந்துகளிலேயே இவ்வாறு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் ...

மேலும்..