January 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (26) அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ ...

மேலும்..

யாழில் வைத்தியர், தாதியர்கள் 7 பேர் சுயதனிமைப்படுத்தலில்

யாழ். போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட்ட ...

மேலும்..

இலங்கைக்கு எதிராக வலுவான பிரேரணை கட்டாயம் வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான மிகவும் வலுவான புதியதொரு பிரேரணையைக் கொண்டுவரவேண்டும் என்று ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 51 ஆயிரம் பேர் குணமடைவு !

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 709 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ...

மேலும்..

வாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பால் சுகாதார திணைக்களத்தினால் பரிசோதனை..

(ந.குகதர்சன்) வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இருபத்தைந்தாம் திகதி வரை 354 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். இந்த நிலையில் நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை ...

மேலும்..

ரஞ்சன்ராமநாயக்க அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த ரஞ்சன் ராமநாயக்க நீர்கெழும்பு பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் இருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ...

மேலும்..

மரத்தின் கிளை குத்தியதால் சாரதி பலி..

(வா.கிருஸ்ணா) மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில், மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மரத்தின் கிளை குத்தியதால் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உயிரிழந்துள்ளார் என ...

மேலும்..

வவுனியா நகரசபை மைதானத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (26) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சையில் வட.மாகணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த ...

மேலும்..

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (26) முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் ...

மேலும்..

கல்முனை சந்தையில் சுகாதாரத்தை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை; வியாபாரஸ்தலமும் மூடப்படும்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தலா 3,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்டவர்களின் வியாபாரஸ்தலம் மூடப்படும் எனவும் சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 28 ...

மேலும்..

50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா கிளங்கன் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று(26) அதிகாலை 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 03 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் ...

மேலும்..

தேனுடன் இந்த பொருட்களை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித்  தொல்லை குறையும்.  தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் ...

மேலும்..

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000/= சம்பளம் – அரசாங்க உறுதிப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை

தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டு இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியார்களுடனான சந்திப்பு zoom தொழில்நுட்பத்தின் ...

மேலும்..

கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் விவசாயி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதி..

புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் ...

மேலும்..

ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் ...

மேலும்..

இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் போராட்டம்

இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் அட்டன் மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டன. மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் ...

மேலும்..

கவிஞர் அலறி எழுதிய “துளி அல்லது துகள் ” நூல் அறிமுக விழா !

(நூருல் ஹுதா உமர்) கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என அறியப்படும் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் எழுதிய "துளி அல்லது துகள் " இலக்கிய நூல் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை ...

மேலும்..

வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழப்பு

கடந்த வாரத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி ...

மேலும்..

(வீடியோ) பிள்ளையானின் விடுதலை முன்னாள் போராளிகளின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாகும்-இனிய பாரதி

https://www.youtube.com/watch?v=0GuIpIljboM&feature=youtu.be தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போது சிறைச்சாலையில் வாடுவதாகவும் எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடிச்செல்வதை விடஉயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட ...

மேலும்..