February 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்! – சுமந்திரன் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். ...

மேலும்..

சட்டவிரோத ஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு

கட்டான, மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோத ஆயுத களஞ்சியசாலை ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 8 ஆயுதங்கள் மற்றும் 1,171 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

யுத்தப் பாதிப்பு கிளிநொச்சியில் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கலில் தாமதங்கள் ஏற்படுத்துகிறது- கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்

யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டம் பாதிக்கப்பட்டமையால் பிறப்புச் சான்றிதழ்களைப் பதிவுசெய்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்துவைத்து கருத்து ...

மேலும்..

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது-உல‌மா க‌ட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

(பாறுக் ஷிஹான்)   ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது . கடந்த காலங்களில்   இடங்களை  அடையாளப்படுத்தி தருமாறு அரசாங்கம்  கேட்டிருந்ததுடன்  திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை  மேற்கொண்டிருந்ததை காணமுடியும் என    உல‌மா க‌ட்சி ...

மேலும்..

அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும்-கோவிந்தன் கருணாகரம்

அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியினால் ...

மேலும்..

400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்

உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடைந்தன. குறித்த இரண்டு விமானங்களும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளன. கஜகஸ்தானிலிருந்து 235 சுற்றுலாப் பயணிகளுடனான விமானமும் 179 சுற்றுலாப் ...

மேலும்..

வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம்

வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சிலநாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர்சங்கத்தின் செயலாளர் க.கோல்டன் மற்றும் ஏனைய சில ...

மேலும்..

சட்ட நடவடிக்கை எடுங்கள் நீதிமன்றில் சந்திப்போம்!! – அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சி.வி. விக்னேஸ்வரன்அறிவுறுத்து!

அமைச்சர் சரத் வீரசேகர தன்மீது சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அதுகுறித்து நீதிமன்றில் சந்திப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் ...

மேலும்..

சிநேகபூர்வ ஆட்டத்தொடரில் ஓவம் விளையாட்டுக் கழகம் வெற்றி

வவுனியா, ஓமந்தை அரச உத்தியோகத்தர் குடியிருப்பின் ஓவம் விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம்,கோவளம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கிடையில்,ஓவம் விளையாட்டுக்கழக மைதானத்தில் 12 ஓவர்களைக்கொண்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் 3இடம்பெற்றன. இரு அணிகளின் வீரர்களும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினார்கள். முதலாட்டத்தில் முதலில் துடுப்பாடிய ஓவம், 7 விக்கட்டுகளுக்கு 104 ஓட்டங்களைப் பெற்றது. ரி.லதீஸ்வரன் 37, எஸ்.மௌலிதரன் 14, கஜீவன் 11 ஓட்டங்களைப் பெற்றனர். சயந்தன் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். கோவளம் 12 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பெற்றது. அருட்குமரன் ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் ...

மேலும்..

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஊழியர்கள் ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார். அவர்களை இடமாற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றார். ஊழல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதன் நடவடிக்கைகள் ...

மேலும்..

இரண்டு முகக்கவசங்களை அணிந்தால் பாதுகாப்பு அதிகம்!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என ...

மேலும்..

மன்னார்-எழுமாற்றான பரிசோதனையிலேயே நானாட்டானில் உத்தியோகத்தர்கள் 08 பேருக்கு தொற்றுறுதி!

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பிசிஆர் பரிசோதனையிலேயே உத்தியோகத்தர்கள் எண்மருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை-தொல்பொருள் திணைக்களம்

முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போதே இவை ...

மேலும்..

திருகோணமலையில் நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை

(எப்.முபாரக்) திருகோணமலை என்.சீ வீதியில் நகைக்கடையொன்றில்  நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் நேற்றிரவு (10)   இடம்பெற்றுள்ளது. திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் ...

மேலும்..

வடக்கில் 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ...

மேலும்..

புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் படையெடுக்கின்றன – அஷாத் சாலி விசனம்!

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த செயலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்றும் நாளையும் தேர்தல் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

வியாழேந்திரனின் வழிகாட்டலில் ஆடுகள் வழங்கும் திட்டம்

(ந.குகதர்சன்)   பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி,மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சர் சதாசிவம்வியாழேந்திரனின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களுக்கான ஆடுகள் வழங்கும் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மில் தலைமையில் ...

மேலும்..

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று (10 ) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கு எதிராக ...

மேலும்..

கல்முனை மாநகர சபையினால் 12ஆம் வட்டாரம் புறக்கணிக்கப்படுகிறதா? உண்மையில்லை என்கிறார் மாநகர முதலவர் ஏ.எம்.றகீப்

கல்முனை மாநகர சபையின் அனைத்து சேவைகளும் இன, மத, பிரதேச பாகுபாடின்றி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 12ஆம் வட்டார தமிழ் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ...

மேலும்..

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் 26ஆம் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் வியாழேந்திரன் எம்மை ஏமாற்றிவிட்டார்! தேர்தல் காலத்தில் கருணா அம்மானுக்கு வேலை செய்தேன்.

இராஜாங்க அமைச்சருடன் சகல தொடர்புகளையும் துண்டித்து விட்டேன்.கறுப்பு சேட் போடுவதை நான் விரும்புவதில்லை என்பதால்  எனது சொல்லை அவர்கள் கேட்பதில்லை.இதனால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார் என  கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒண்ணாவிரதம் ...

மேலும்..