February 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி நகரில் பாரிய விபத்து

கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெல் ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் கேப்டனுடன் இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஸ்ஸ கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனிடம் மாங்குளம் பொலிசார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நேற்று( 18)மாலை 07.00மணியளவில் ரவிகரன்அவர்களது இல்லத்திற்கு வருகைதந்த மாங்குளம் போலீசார் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்தம் குறைபாட்டை நிவர்த்தி செய்த அரச அதிகாரிகள்

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்தம் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.  வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ...

மேலும்..

மனோ எம்பியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு சபாநாயகர் கடிதம்

நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் ...

மேலும்..

கொரோனா -நாட்டில் மேலும் 647 பேர் பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 647 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் ...

மேலும்..

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் சடலமாக மீட்பு

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2021) மன்னார் பிரதேச ...

மேலும்..

வவுனியா நகரசபை ஊழியர்களின் போராட்டத்தால் களேபரமானது சபை அமர்வு

தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா நகரபை ஊழியர்கள் சிலர் முன்னெடுத்துவரும் போராட்டத்தால் இன்று (18) இடம்பெற்ற சபை அமர்வு களேபரமானது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் சலிஸ்டன், போராட்டம் ...

மேலும்..

கலையரசனின் முயற்சியால் திருக்கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிப்பு…

  திருக்கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் உட்பட ...

மேலும்..

கொரோனா தடுப்பூசியை பகிஷ்கரிப்பத ஜே.வி.பி

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிஷ்கரிப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு மற்றும் ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பிரிவினர் இருக்கின்ற நிலையில், ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷவிற்கான மரியாதையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது – ரவுப் ஹக்கீம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான மரியாதையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்தை, ...

மேலும்..

பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள் – பொலிசார் எச்சரிக்கை!

குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் ...

மேலும்..

திருகோணமலையில் மூன்று இடங்களில் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவர் விளக்கமறியலில்

(எப்.முபாரக் ) திருகோணமலையில் மூன்று இடங்களில் நான்கு பவுன் தங்கச் சங்கீலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(18) உத்தரவிட்டார். கூம்புகார் வீதி,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்கள் 425 பேருக்கு தடுப்பூசி

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்கள் 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுத் தருமாறு சட்டமா அதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இந்நிலையில், குறித்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை..!

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது. புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து ...

மேலும்..

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும், 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மார்ச் மாதம் 05 ...

மேலும்..

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் இடையிலான சந்திப்பு

தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம் ...

மேலும்..

மட்டக்களப்பு நொச்சிமுனை கிராம உத்தியோகத்தரை இடமாற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை கிழக்கு கிராம உத்தியோகத்தராக கடந்த 3 வருடங்களாக  கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தரை உடன் இடமாற்றம் செய்யுமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று (18) கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு  முன்னாள் ஆர்ப்பாட்டத’தில் ஈடுபட்டனர். குறித்த கிராம ...

மேலும்..

நாட்டை பாதுகாக்குமாறு நாம் அனைவரும் கடவுளிடம் மன்றாடுவோம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இந்த நாட்டை பாதுகாக்குமாறு நாம் அனைவரும் கடவுளிடம் மன்றாடுவோம் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். திருநீற்றுப் புதன் சிறப்பு வழிபாடு நேற்றைய தினம்(புதன்கிழமை) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் .பல்கலைக்கழகங்களுக்கு இந்த ...

மேலும்..

காத்தான்குடியில் கழிவு தேயிலை தூளை பொதி செய்து விற்பனை செய்யும் களஞ்சியசாலை முற்றுகை!

மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவு தேயிலை தூளை பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் நேற்று (17) முற்றுகையிட்டு இலட்சக் கணக்கான பெறுமதியான கழிவு தேயிலையை மீட்டுள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பிரதான ...

மேலும்..

கல்முனை -சமுர்த்தி வங்கியில் ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவை ஆரம்பம்

- (எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை பிரதேச செயலகப்பிரிவின் கீழ் வரும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியானது நேற்று  புதன்கிழமை (17)மக்களுக்கான நாளாந்த கொடுக்கல்,வாங்கல் நடவடிக்கைகளை ஒன்லைன்( Online )செயற்பாட்டினூடாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப் அவர்களின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ் ...

மேலும்..

அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை, அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிக்கிறது -அமெரிக்கா

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை, அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று (வியாழக்கிழமை) தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக ...

மேலும்..

யாழில் வீடொன்றுக்குள் புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல்!

நவாலி அரசடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்தக் கும்பலை துரத்திச் சென்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸார்ரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமாக உள்ளது -ஹரீஸ்

(நூருல் ஹுதா உமர்)   எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எண்ணியுள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானின் விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் திடீரென அவரது  பாராளுமன்ற உரை ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு எதிரான ...

மேலும்..

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம்

அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையமொன்று உருவாக்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஊடக அமைச்சின் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  (17) ...

மேலும்..

எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆ்க்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆ்க்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(17)  பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலத்தை குறைத்து நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கோரிக்கை!

(றாசிக் நபாயிஸ்) பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலத்தை ஆறு மாதங்களாக குறைத்து பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. 2021.02.17 என திகதியிடப்பட்ட கடிதத்தில் இம்மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

கல்முனை மாநகர சந்தையின் ஆதிக்கம் கைநழுவியதாலேயே உறுப்பினர் மனாப் என்னை அபாண்டமாக விமர்சிக்கிறார்-மாநகர முதலவர் றகீப்

கல்முனை பொதுச் சந்தையானது மாநகர சபையினால், சட்டப்படி பகிரங்க விலைமனுக்கோரல் (Tender) செய்யப்பட்டு, குத்தகைக்கு வழங்கப்பட்டதால், கடந்த 30 வருட காலமாக அச்சந்தையில் தனது குடுமபத்தினருக்கிருந்து வந்த ஆதிக்கம் கைநழுவிச் சென்றிருப்பதாலேயே மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப், என்னை அபாண்டமாக ...

மேலும்..

சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட காரியாலயம் சம்மாந்துறையில் திறப்பு!

(ஐ.எல்.எம் நாஸிம்) ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல  மாவட்ட   காரியாலய திறப்பு விழாவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வும்  நேற்று (17) மாலை  ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்  எம்.ஏ.ஹசன் அலி ...

மேலும்..