February 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (20) காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் . கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே  இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் ...

மேலும்..

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி இன்று (19) முறியடிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை ...

மேலும்..

கிளிநொச்சியில் கடும் மழைக்கு மத்தியிலும் தீச்சட்டி போராட்டம் ஆரம்பம்

கிளிநொச்சியில் கடும் மழைக்கு மத்தியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று (சனிக்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த தீச்சட்டி போராட்டம் ...

மேலும்..

விபத்தில் கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் யாழில் உயிரிழப்பு

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார். இன்று காலை ...

மேலும்..

முன்னாள் பா.உ ஸ்ரீநேசன் மீது பொலிஸார் விசாரணை

பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான சாத்வீக மக்கள் பேரணியில் கலந்து கொண்டமைக்காக மட்டக்களப்பு முன்னாள் பா.உ ஸ்ரீநேசன் மீது 18.02.2021 அன்று அவரது இல்லத்தில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை நடாத்தி வாக்கு மூலத்தினைப் பெற்றனர். ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில் பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். பொலிஸார் தாக்கிய போதிலும் தான் பொறுமை இழக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார். மேலும் இப்படியான சாத்வீகப் போராட்டங்கள் “ஜனகோசய” என்ற பெயரில் தென்னிலங்கையில் நடை பெற்றதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். Attachments area

மேலும்..

இம்ரான்கானை வரவேற்க ஒத்திகை!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரை வரவேற்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்று அங்கு சென்று ஒத்திகை ...

மேலும்..

ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள்   பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் ...

மேலும்..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி பேரணி; யாழ்.மாநகர முதல்வரிடம் வாக்குமூலம்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்படுகிறது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை ...

மேலும்..

பொத்துவிலில் உணரப்பட்ட நில நடுக்கம்!

அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (19) மதியம் 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர். பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- செல்வம் அடைக்கலநாதன்

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்குடையது ...

மேலும்..

சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது – தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்பக்கூடாது என இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ...

மேலும்..

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் -சாணக்கியன்!

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனிடம் பொலிசார் விசாரணை

(சந்திரன் குமணன்) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று வெள்ளிக்கிழமை (19) திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று  பொலிஸ் நிலையங்களின் பொலிசார்  3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். கடந்த  3ம் திகதி தொடக்கம் 6 ...

மேலும்..