February 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் மே மாதத்திற்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அம்பியுலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ! போராட்ட களத்தில் அரசியல் பிரமுகர்கள்!

கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர். ஜனாஸா ...

மேலும்..

நெடுந்தீவு நோக்கி பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்பு

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடி இரண்டு நாட்களாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட பணியில், நயினாதீவு முனைக் கடலிலேயே ஒருவரின் சடலம் ...

மேலும்..

கழிவு தேயிலை தூள் பூண்டுலோயாவில் கைப்ப்பற்றபட்டது!

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (22.02.2021) கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து குறித்த கழிவுத் ...

மேலும்..

அமெரிக்கத் தூதுவர் யாழ்பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார். யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த ...

மேலும்..

புதிய அரசியலமைப்பு தொடர்பாக கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது – திஸ்ஸ விதாரன

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணிக்குள் ...

மேலும்..

இலங்கையில் சீனமொழியில் பெயர்பப்பலகைகள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் குறைந்தது

இலங்கையில் அண்மைய காலப்பகுதியில் சீன அரசாங்கத்தினதும், சீன மொழியினதும் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழி என எழுதப்பட்ட இடங்களில் தற்போது தமிழ் மொழியை காண முடியவில்லை. இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் ...

மேலும்..

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் 23.02.2021 முற்பகல்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது-சிவயோகநாதன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்த விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மேற்படி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் சிவில் சமூகங்களின் ...

மேலும்..

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்கு நேரில் சென்று ...

மேலும்..

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் உள்பட சிலரின் ...

மேலும்..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்  பெற்றுக்கொண்டனர் என அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை இன்று காலை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும்..

சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 3200 பேருக்கும் அதிகமானோர் கைது!

சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக நேற்றையதினம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் ஒரே விடுதியில் ...

மேலும்..

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என தெரிவித்துள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இரு விடயங்களை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர் என தெரிவித்துள்ள அவர் எச்சரிக்கை கிடைத்த நிலையிலும் ...

மேலும்..

‘கொவிட்தடுப்பூசி – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்!

” பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது சேவைகளில் உள்ள சிற்றூழியர்களுக்கும்  கோவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட, எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன்.” என ...

மேலும்..

அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார். சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21ஆயிரம் அமெரிக்கடொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயம் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் குறித்த ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு சட்ட நடவடிக்கை!

இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பிரதேசத்திற்குள் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை கடுமையாக்கவுள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு அனுமதி!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான்பரப்பினூடாக பயணிப்பதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும்..

காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் மரணம்!

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது மகன் தருமகுலநாதன் வயது 39 கடந்த 2000 ஆம் ...

மேலும்..

14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசி!

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்புப் பெறும் வகையில், நாட்டின் மொத்த சனத்தொகையில், 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்க, சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக பதில் சுகாதார அமைச்சரால் சில யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் ...

மேலும்..

சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு !

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களே ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்கள்

2021.02.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. 2021 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் அரசியலமைப்பு, 154G அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு மாகாண சபைகளுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் செலவிடல்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் ...

மேலும்..

நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் விளக்கமறியலில்!

(எப்.முபாரக் ) திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 91ஆம் கட்டை பகுதியில் நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்தளாய் நீதிமன்ற நீதவான் விஷானி தேனபது முன்னிலையில் திங்கட்கிழமை  ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் விசாரணை!

வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்தனர். அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ...

மேலும்..

கல்முனையில் வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினைப் பாதுகாத்தல் விழிப்பூட்டல் பேரணி

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஒன்றான வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினைப் பாதுகாத்து அக்கல்வி தொடர்பாக சமூக விழிப்பூட்டல் செய்யும் பேரணி அரச சார்பற்ற நிறுவனமான நவஜீவன நிறுவனத்தினால் சி.பி.எம்.நிறுவனத்தின் அணுசரனையுடன் ...

மேலும்..