March 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி விழா…

மஹா சிவராத்திரி விழா  ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயம் அட்டப்பளம் நிந்தவூர் தலைமை  திரு அ. கொபாலன் பிரதம அதிதி திரு வே. ஜெகதீசன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம் அம்பாறை சிறப்பு அதிதி திரு ரி.எம்.எம். அன்சார் திரு கு ஜெயராஜி மாவட்ட செயலக ...

மேலும்..

30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விழா!

30 ஆண்டுகளின் பின்னர் குருந்தூர் மலை ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி விழா! முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். 11.03.21 அன்று காலை குருந்தூர் மலை ...

மேலும்..

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் முதலைகளின் நடமாட்டம்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், அக்குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை முதலைகளின் பிடிக்குட்பவடுதாகவும்  கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். போரதீவுப்பற்றுப் ...

மேலும்..

அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம்

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் ...

மேலும்..

பொது மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரடி விஜயம்

கொழும்பு நகரசபை பகுதியில் பொது மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.11) நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அபயராம விகாரைக்கு சென்று, அங்கு 1,200 பேருக்கு கொவிட் ...

மேலும்..

வவுனியா கண்டி வீதியில் விபத்து : பெண் காயம்

வவுனியா கண்டி வீதியில் (ஏ9)  தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக இன்று (11) மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து ...

மேலும்..

குடும்பத் தகராறு தாக்குதலில் குடும்பஸ்தர் பலி மனைவி பிள்ளைகள் கைது!

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட நீண்ட நாள் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஆறுமுகத்தான்குடியிருப்பு பாரதி வீதியை அண்டியுள்ள வீட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வீட்டில் மனைவி பிள்ளைகள் ஆகியோரின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியானவர் கணேஷ் குணராசா ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் தடை குறித்து மக்களுக்கு அறிவிப்பு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை மறுதினம் (13) கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், ...

மேலும்..

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி தர்மபுரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துத் தாக்குதல் ...

மேலும்..

நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்-சம்பந்தன்

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் ...

மேலும்..

இந்திய உயர்ஸ்தானிகர் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு விஜயம்

வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை – இந்தியா இணைப்புப் ...

மேலும்..

திருகோணமலையில் வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. அதன்படி வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பேஜ் உடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2021 மார்ச் 13 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள ...

மேலும்..

மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து ...

மேலும்..

கரையோர காணிகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு; உடனடியாக வெளியேறுமாறு கல்முனை மாநகர சபை பணிப்பு Inbox

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் 65 மீட்டர் கரையோர பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியிருக்கும் தனி நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்படவிருப்பதால், சம்மந்தப்பட்டோர் அக்காணிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மாநகர ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம்: தாயின் முறைப்பாட்டையடுத்து வழக்கு விசாரணை!

வவுனியா  பொதுவைத்தியசாலையில் கடந்த 14.12.2020 அன்று மரணித்த குழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று (10.03.2021) அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு திகதியிடப்பட்டது. குறித்த குழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில் பிறந்து அதே தினம் மலை ...

மேலும்..

ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாகவே ஒருவர் கொலை

மீரியகொட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாகவே ஒருவர் ...

மேலும்..

வடக்கில்,வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் கோரிக்கை

வடக்கில், தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (11) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், ...

மேலும்..

பிரதமரின் மகா சிவராத்திரி தினச் செய்தி

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து பக்தி மயமான இந்தச் சுப நன்னாளைப் போற்றி அனுஷ்டிக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைக் கூறிக் கொள்வதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன். இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் ...

மேலும்..

வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியிலும் கச்சேரி - நல்லூர் வீதியிலும் பொலிஸார் மாற்றப் பாதைகளில் வாகனங்களை அனுப்புகின்றனர். தமக்கு ...

மேலும்..

அதிபர் நியமனத்தில் தமிழ், முஸ்லிம்களுக்கு அநீதி; ஆசிரியர் சங்கங்கள் தலையிடாதிருப்பதேன்?

(அஸ்லம் எஸ்.மௌலானா) 2019ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு முரணாக வழங்கப்பட்ட இலங்கை அதிபர் சேவை தரம்-3 நியமனத்தில் தமிழ் மொழிமூல விண்ணப்பதாரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் என்பன ...

மேலும்..

நிபந்தனைகள் இன்றி ஆயிரம் ரூபா வேண்டும் – பெருந்தோட்ட தொழிலாளர்கள்

(க.கிஷாந்தன்)   பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.   தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், சம்பள உயர்வை ...

மேலும்..

வவுனியாவில் சிவராத்திரி வழிபாட்டில் கலந்து கொள்வோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை

வவுனியாவில் இடம்பெறும் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்பவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதர்களும், பொலிசாரும் ஈடுபடுபட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 அச்சுறுத்தல் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில்ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் 12ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 12ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக ...

மேலும்..

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரியினை முன்னிட்டு விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்று(வியாழக்கிழமை) மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல் ஆலையத்தை சூழ்ந்த பகுதிகளில் புகையூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் கொரோனா கொத்தணி உருவாகாமல் இருப்பதற்காக மன்னார் சுகாதாரத் துறையினரின் ...

மேலும்..