March 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகயையும் கவனித்துக்கொள்ள முன்வந்த மருத்துவர்…!

பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார். பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்தது லுனுகலையில் ...

மேலும்..

ஐ.நா. தீர்மானம் ஏமாற்றம் தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பயனுள்ளவை; மாவை!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலமை வகித்த நாடுகளும் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்பதை நாம் நம்புகின்றோம் என இலங்கை ...

மேலும்..

இலங்கை குறித்து ஆராய புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமனம்

இலங்கை தொடர்பாக ஆராய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால், சட்ட ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில்,  ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையைக் ...

மேலும்..

பிரேரணை தேவையற்ற ஒன்றாகும். இது இலங்கை சட்டத்திற்கு முரண்பட்டதாகும்!

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாகஅரசாங்கம் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த நிலையை தொடர்ச்சியாக பாதுகாப்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என்று வெளிநாட்டு ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும் நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

54 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

புங்குடுதீவில் வீதி புனரமைப்பு

பற்றைக்காடுகள் சூழ்ந்து   ஆபத்தான பிரதேசமாக காணப்பட்டிருந்த புங்குடுதீவு முதலாம் வட்டாரம் வைரவர் கோயில் வீதி போக்குவரத்துக்கும் நடைபாவனைக்கும் உகந்தவாறு புங்குடுதீவு உலகமைய ஒருங்கிணைப்பாளர்களின் நிதிப்பங்களிப்பிலும் உறுப்பினர்களின் செயற்பாட்டிலும்  சீரமைக்கப்பட்டுள்ளது .

மேலும்..

மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டிய கணவன், அதே தீயில் தானும் குதித்து உயிர்நீத்த சம்பவம்!

தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டியகணவன், அதே தீயில் தானும் குதித்து உயிர்நீத்த சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பளை - அங்குருமல்ல பகுதியில் நேற்று காலை 9.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்படி ...

மேலும்..

நாவலபிட்டியில் பயணிகளுடன் சென்ற ரயில், பொருட்கள் கொண்டு செல்லும் ரயிலுடன் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த விபத்து தவிர்ப்பு!

நாவலபிட்டி ரயில் நிலையத்தில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படவிருந்த நிலையில், தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாவலபிட்டி ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமிக்ஞை வழங்கும் அதிகாரிகள் பணி நீக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதுளையில் இருந்து கண்டி வரை பயணித்த பொருட்கள் ...

மேலும்..

வாகன விற்பனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு – நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின் ஆரம்ப பதிவுக்கான புத்தகங்களை காப்புறுதி நிறுவனங்களில் கொள்வனவு ...

மேலும்..

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சோயா எண்ணெய்!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் புதிய சந்தை மாற்றங்களுக்கு அமைவாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசாமில் நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். இணையத்தள ...

மேலும்..

வடக்கில் தொல்லியல் அகழ்வுப் பணி: உடனடியாகக் கைவிடவேண்டும் ! – கூட்டமைப்பு வலியுறுத்து

வடக்கில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சபையில் நேற்று வலியுறுத்தினர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- குறிப்பாக கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் ...

மேலும்..

பொன்சேகாவிடம்1 பில்லியன் நட்டஈடு கோரியுள்ள முத்தையா முரளிதரன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம், இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்,முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியுள்ளார். இந்த மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், பீல்ட் மார்சல் சரத் ...

மேலும்..

மாளிகைக்காடு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று ஆரம்பம்

கடந்த பல மாதங்களாக கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆரம்பகட்ட வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து  வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிராந்திய அரசியல்வாதிகள் பலரும் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 25.03.2021 இன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் ...

மேலும்..

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டமைக்கு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியாக ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் சிறந்த கல்விக் கொள்கையே எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய ...

மேலும்..

டெங்கு நுளம்பு பெருகக் கூடிய பொருட்களை அதிகமாகக் கொண்டு வரும் மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள்;டெங்கை ஒழிக்க வித்தியாச முயற்சி.

(எம்.என்.எம்.அப்ராஸ்) டெங்கு நுளம்பு  பரவலை  கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி அவர்களின் வழிகாட்டலில்  ,மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுக் அவர்களின் நெறிப்படுத்தலில் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஜுனைதினின் ஏற்பாட்டில் கல்முனை அல் -அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு  ...

மேலும்..

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை’ என்ற உண்மையை அரசாங்கம் மறைக்க முடியாது – மனோ கணேசன்

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் ...

மேலும்..

அரசதரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளங்களை சுரண்டுவதற்கு உறுதுணையாகஇருக்காமல் எதிராக குரல் கொடுக்க வேண்டும் – சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ...

மேலும்..