March 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆறுமுகன் தொண்டமானின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்குவதற்காக ஒழுங்கு செய்திருந்த இரத்த தான நிகழ்வு தோட்ட வீடமைப்பு ...

மேலும்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினர், குறித்த ...

மேலும்..

சாய்ந்தமருதில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களையும் சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச கடற்கரை பிரதேசம் சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்றுகாலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம்

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? ...

மேலும்..

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனால் உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது. கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் கப்பலை அங்கிருந்து ...

மேலும்..

கந்தளாய் பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிர் மரணம்.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிர் மரணமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று(27) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயக்குச் ...

மேலும்..

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா

வவுனியா, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி சுமந்திரன் கலந்துரையாடல்…

(துதி மோகன்) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துகளை ஏப்ரல் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த கோரல் !

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்க சேவையாளர்களும் தங்களது சொத்துகளையும் பொறுப்புக்களையும் ஏப்ரல் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாரால் கேட்கப்பட்டுள்ளது. “1988ஆம் ஆண்டின் 74ஆம் இலக்க சட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டின் ...

மேலும்..

யாழ். வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பணிப்பாளர், மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ...

மேலும்..

ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில்  முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று காலை  இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை ...

மேலும்..

ஐ.நா.வில் பிரேரணை தோற்க வேண்டுமென சில தமிழ் கட்சிகள் கைக்கூலிகளாகச் செயற்பட்டன- சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லையென பிரசாரம் செய்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

திருக்கோயில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடச் சென்ற பியசேன கிருத்திகன்

திருக்கோயில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தீயில் கருகிய மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை நீர் வளங்கல் அமமைச்சரின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகன் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நேற்று பாடசாலைக்கு நேரடியாக பார்வையிடச் சென்றார் அத்துடன் பாடசாலையின் மஹிந்தோதய விஞ்ஞான ...

மேலும்..