March 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும்!

சப்ரகமுவ, தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் ...

மேலும்..

அமைப்புக்களை தடை செய்த இலங்கை

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டின் ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம்

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் ...

மேலும்..

அரசாங்கத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்தி எமது மக்களுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்… முன்னாள் பிரதியமைச்சர் – விநாயகமூர்த்தி முரளிதரன்

(துதி மோகன்) பல சிக்கலான கட்டத்தில் இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஜனாதிபதி. அதற்கு அத்திவாரமாக இருக்கின்ற பிரதமர் என சிறந்த ஒரு நிருவாகக் கட்டமைப்புக்குள்ளால் நாம் நிறைய சாதனைகளைப் படைக்கலாம். இந்த அரசாங்கத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். ...

மேலும்..

இந்தியா நடுநிலைமை வகித்தாலும் மிக ஆக்கபூர்வமான பணிகளை அந்தத் தீர்மானத்தின் ஊடாக எடுத்திருக்கின்றது-மாவை .சேனாதிராஜா

(துதி மோகன்) இந்தியா நடுநிலைமை வகித்தாலும் மிக ஆக்கபூர்வமான பணிகளை அந்தத் தீர்மானத்தின் ஊடாக எடுத்திருக்கின்றது. அவர்கள் மிகவும் தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தில் நடுநிலை வகித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிறந்த முறையில் எமது மக்களின் விடுதலைக்காக சர்வதேசத்தில் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை ...

மேலும்..

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (28)  முன்னால் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது மரணித்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான றசீட் எம்.ஹபீல், சிவப்பிரகாசம் ஐயா மற்றும் பன்னூலாசியரான எம்.எம்.எம்.நூறுல் ஹக்  ஆகியோருக்கான  நினைவுரைகளை ...

மேலும்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் !

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள கம்பனின் உருவச்சிலையடியில் இவ் நினைவு தினம் இடம்பெற்றது. இதன் போது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி ...

மேலும்..

ஐநா தீர்மானம்தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்-விநாயகமூர்த்தி முரளிதரன்

(துதி மோகன்) ஐநா தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். எனவே சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என ...

மேலும்..

தனது கட்சியின் எம்.பிக்களை பொதுவெளியில் விளாசி தள்ளினார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்.

நாடுமுழுவதிலும் இருந்து வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் போட்டிபோட்டுக்கொண்டு சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவை இல்லாமல் வாய் உழறி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அங்கும் இங்குமாக இப்போது தலைவரையும் வம்புக்கு இழுக்கின்றனர். இதன் பின்னணி என்ன ...

மேலும்..

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் -ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். பிள்ளைகள் கல்வியால் உயர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ...

மேலும்..

யாழில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (27) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா ...

மேலும்..

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது-மகேசன்

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார். அதனால் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும. திருநெல்வேலி பரமேஸ்வரா ...

மேலும்..

இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடல் பாகங்கள் ...

மேலும்..

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை கத்தோலிக்க மறைமாவட்டஆயர் பொறுப்பேற்பு

பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை(19) இடம்பெற்ற  கோர விபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய  வின்சன் பெர்னாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார் என்று, குறித்த பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் ...

மேலும்..

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28)  மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக  மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம்  லேனுஜன் (15 வயது) எனவும் ...

மேலும்..

ஜெனீவா அழுத்தத்திற்கு அச்சமின்றி முகம்கொடுக்க தயார்-ஜனாதிபதி

ஜெனீவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். நீண்ட காலமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியாக ...

மேலும்..

சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய முயற்சி!

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 14 ட்ரக் இயந்திரங்கள் நேற்று இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக சுயெஸ் கால்வாய் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ...

மேலும்..

சிரேஷ்ட ஊடகவியலாளர் நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், “ஒளியின் இறுதி ஒப்பம்” கவிதைத்தொகுப்பு வெளியீடும்

அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், "ஒளியின் இறுதி ஒப்பம்" கவிதைத்தொகுப்பு வெளியீடும் இன்று மாலை மருதம் கலை, இலக்கிய வட்ட ஏற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றமிஸ் ...

மேலும்..

யாழ் -புத்தூர் வீரவாணியில் ஆண் ஒருவர் வெட்டிக்கொலை!

புத்தூர்  வீரவாணி தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் ...

மேலும்..

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழா

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளையும், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும் பதவி  உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும், பாராட்டி கெளரவிக்கும் ...

மேலும்..

திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை ...

மேலும்..

முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இவ்வாறான ஆபத்துக்களின்போது, விரைவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்கான பொறிமுறையொன்று ...

மேலும்..