April 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக ஜெயராஜ்!

இலங்கை மின்சார சபை சாய்ந்தமருதுபாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய மின் அத்தியட்சகராக கோ. ஜெயராஜ் கடமையை பொறுப்பேற்றார். இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் மின் அத்தியட்சகர்.ஏ.எச்.எம். பயாஸ் அவர்களின் இடமாற்றத்தை அடுத்து சாய்ந்தமருது பாவனையாளர் சேவை நிலையத்தின் புதிய ...

மேலும்..

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் இன்றைய (05) தினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஜவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இதற்கமைவாக , நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ...

மேலும்..

யாழ்- பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டஇருவர் கைது!

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். பொம்மைவெளியைச் சேர்ந்த 35 ...

மேலும்..

இலங்கை-அழகி போட்டியில் பறிக்கப்பட்ட அழகி மகுடம் மீண்டும் கையளிப்பு

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டுள்ள மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பறிக்கப்பட்ட மகுடத்தை மீண்டும் அவரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று (04) இரவு  இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி  ...

மேலும்..

உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை!

உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவு வெளியாக்கப்படவுள்ளது. அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் ...

மேலும்..

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நல்லடக்கம்!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத ...

மேலும்..

வலி கிழக்கில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்ட பிரதேசசபை!

மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து    வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பிரதேச சபையினால் பறக்கவிடப்பட்டுள்ளன. ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ள இன்றைய தினத்தினை (திங்கட்கிழமை) துக்க ...

மேலும்..

யாழ் மிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு;மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஏ9 வீதியையும் மறித்து போராட்டத்தில்!

தென்மராட்சி, மிருசுவிலில் தனியாருக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்காக நிரந்தரமாகசுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பால்அந்த முயற்சி கைகூடவில்லை. இதன்போது, மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஏ9 வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. மிருசுவில் இராணுவ முகாம் ...

மேலும்..

ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல, தங்களது பங்களிப்பைச் செய்வது போன்று மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரையம்பதி பிரதேசத்திற்குட்பட்ட அரச ...

மேலும்..

தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்

தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்படவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டார். இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் ...

மேலும்..

நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, சில விடயங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக  அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் எதிர்க்கட்சித் ...

மேலும்..

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில், நேற்று  (04) இரவு, காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரின் சாரதி உட்பட காரில் பயணித்த நால்வர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். நுவரெலியா வசந்த காலத்தைப் பார்வையிடுவதற்காக, காரில் வந்த ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்நீதி நூல்கள் வழங்கும் அறிமுக விழா…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகமும், அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கு நீதி நூல்கள் மற்றும் துணைநூல்கள் வழங்கும் அறிமுக விழா 04.04.2021  ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலக கட்டிடத்தில் ...

மேலும்..

இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

மறைந்த ஆயர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (05) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...

மேலும்..

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : மூன்றாவது தடவையாகவும் ஆரம்பித்தது இளைஞர்களின் போராட்டம் !

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக  வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் ...

மேலும்..

சீனப் பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல்!

இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நடவடிக்கைக்காக சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கை மக்களுக்கான இந்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விசேட ...

மேலும்..

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் போராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் திருவுடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து ...

மேலும்..

சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி : பயர் ஹீரோஸ் சம்பியனானது !!

அமரர் சிவானந்தம் தர்மிகனின் ஞாபகார்த்தமாக "2011 உயர்தர மாணவர் ஒன்றியம்" மற்றும் "காரைதீவு டைனமிக் விளையாட்டுக்கழகத்தின்" இணை ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக நடைபெற்று வந்த சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து ...

மேலும்..