April 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ...

மேலும்..

அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணனிகளை களவாடிய 05 இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

(பாறுக் ஷிஹான்) பாடசாலை ஒன்றின் அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணனிகளை களவாடிய 5 ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021 -04-05 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ...

மேலும்..

ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது!

வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பளை காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்காவற்துறையினர் ...

மேலும்..

வவுனியாவில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

வவுனியா நகரில் கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினருடன் இணைந்து வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் சில நாட்களில் வரவுள்ள நிலையில் வவுனியா நகரில் மக்களின் ...

மேலும்..

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்த விமானப்படை வீரர் புதிய சாதனை

இலங்கை விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார். அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு ...

மேலும்..

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம்

வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார். புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது இந்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ...

மேலும்..

யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் தடை ...

மேலும்..

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் மஞ்சள் அறுவடை

(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கையானது  வெற்றிகரமாக அறுவடை  செய்யப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரஹ்மான் அவர்களின் தலைமையில் இவ் மஞ்சள்  அறுவடை  நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. சுமார் 25kg  அளவிலான மஞ்சள் இதன் போது அறுவடை செய்யப்பட்டதுடன், இவ்  அறுவடை நிகழ்வில் ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் ...

மேலும்..

அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும்” நூல் வெளியீடு

(நூருள் ஹுதா, றாசிக் நபயிஸ், எம்.என்.எம். அப்ராஸ், ஏ.எல்.எம்.சினாஸ்) நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ...

மேலும்..

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்!

கொழும்பு, மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திஸாநாயக்க, தனது 58 ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்

மேலும்..

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி மீளத் திறக்கப்பட்டது!

திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில் பிசிஆர் அறிக்கையின் அடிப்படையில் இன்று 55 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் ...

மேலும்..