April 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்?

எதிர்வரும் மே மாதமளவில் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபா முதல் 200 ரூபா வரையில் வரையில் அதிகரிக்ககூடும் என அரச வட்டார தகவல் தெரிவித்துள்ளன. 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவிலும் ...

மேலும்..

(வீடியோ)புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் தலைமையில் சுப நேரத்தில்  நிறைவேற்றப்பட்டது இந் நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (17) காலை  நிகழ்த்தினார். காலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி  நீல நிற ஆடை அணிந்து ...

மேலும்..

ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் வுவுனியாவில் முருங்கை மரம் வழங்கி வைப்பு

ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொணிப்பொருளில்  முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபல்யப்படுத்துவதற்கான “வாழ்க்கைக்கான தோட்டம்” எனும் தேசிய வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம் வவுனியா நொச்சிமோட்டை நரசிங்கர் ஆலயத்தில் ...

மேலும்..

தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர இதனை ...

மேலும்..

நாவலனின் ஏற்பாட்டில் தீவகத்தில் பல உதவித்திட்டங்கள் முன்னெடுப்பு

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .திருமதி சிவராஜா கேசவராணி தம்பதிகளின் நிதியுதவியில் அமரர் மயில்வாகனம் சுந்தரம்பிள்ளை அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும்  வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ...

மேலும்..

செயலிழந்த நிலையில் வவுனியாவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட ...

மேலும்..

யாழில் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை காவல்துறை பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி காவல்துறை பிரிவுகளில் தலா ஒருவரும் ...

மேலும்..

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.இக்கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார். 89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய ...

மேலும்..

எனக்கு ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை – வேலன் சுவாமிகள்

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என ...

மேலும்..

உலகத்தில் தமிழ் அழியாமல் பாதுகாக்கப்படும் என உரைத்த உத்தமனை இழந்தோம்- நடிகர் விவேக் மறைவுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் இரங்கல்!

  தயாகத்தில் ஒரு தமிழர் வாழும் வரைக்கும் உலகத்தில் தமிழ் அழியாமல் பாதுகாக்கப்படும் என உரைத்த உத்தமனை இழந்தோம் என தென்னிந்திய திரைப்பட நடிகர் விவேக்கின் மறைவினையோட்டி காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி .ஜெயசிறில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார் தமிழர்களுடைய மன ...

மேலும்..

மருமகனின் கத்திக்குத்தில் மாமியார், மச்சான் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக  மருமகன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு ...

மேலும்..

பதுளை – ஹல்துமுல்ல,வெலிஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் மீட்பு

(க.கிஷாந்தன்) பதுளை – ஹல்துமுல்ல, வெலிஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹல்தமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயாவில் நேற்று வியாழக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு ...

மேலும்..

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக்  தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். சென்னை- சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக விவேக், வடபழனியிலுள்ள சிம்ஸ் தனியார் ...

மேலும்..

யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் – மகேசன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் ...

மேலும்..