April 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

1,263 கிலோ மஞ்சள் பறிமுதல்..

வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற ...

மேலும்..

35 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு ..

35 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு அளித்துள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஒரு குடும்பத்தில் நீண்ட காலம் கழித்து அதாவது 35 ஆண்டுகள் கழித்து ஒருபெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் ...

மேலும்..

யாழ் நகரி்ல் எரியூட்டப்பட்ட இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள்!

யாழ்ப்பாண நகரி்ல் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை​யைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து ...

மேலும்..

பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் வீடு திரும்பியிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

மின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் வீடு திரும்பியிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஊரகஸ்மங்கஸ் சந்தி, கலுவலகொட பகுதியில் நேற்றிரவு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

மேலும்..

ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ...

மேலும்..

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று (24) காலையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல், மத்திய, ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது பிற்பகல் 2 மணிக்கு பின்பு சில இடங்களில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர்..

பொலிஸார் துரத்தி சென்ற டிப்பர் வாகனம் ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிக்கொண்டு தப்பி சென்ற போதிலும், விபத்துக்குள்ளான ஆசிரியை மீட்காது பொலிஸாரும் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி- திக்கம் பகுதியில் ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா, இராகலை மாகுடுகல - கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.04.2021) முற்பகல் நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் இராகலை சூரியகாந்தி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத மலையக அரசியல் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் அறுவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 18 பவுண் தங்க நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை ...

மேலும்..

கிழக்கின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம் பெற்ற உமாகாந்தன் கௌரவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம்பெற்ற வைத்திய பேராசிரியர் மகேசன் உமாகாந்தனை வைத்தியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (22) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் ...

மேலும்..

யாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் ...

மேலும்..