May 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது…

உரத்தடையின் மூலம் எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வீழ்ச்சியடையும். இன்றைய நிலையில் நாம் நம்பியிருக்கின்ற உற்பத்தி அரிசியும், ஒரு பாதி தேங்காயுமேயாகும். அதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கே நாடு வந்து சேரும். ஜனாதிபதி நினைப்பதையெல்லாம் பிரயோக ரீதியில் நடத்திவிட முடியாது. என மட்டக்களப்பு ...

மேலும்..

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் முக்கிய கோரிக்கை !!

கல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், கல்முனை வரலாறு, கல்முனையின் எல்லைகள், கல்முனை வாழ்மக்களின் வாழ்வாதாரம், கல்முனை வாழ் மக்களின் பாசப்பிணைப்பு என எதையும் அறியாமல் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனையை பற்றி பிழையான சித்தரிப்புக்களை செய்துகொண்டு வருகிறார்கள். கடந்த ...

மேலும்..

வேர்ல்ட் விசன் நிறுவத்தினால் மாவட்ட செயலகத்தில் இரண்டு கிருமித்தொற்று நீக்கி விசிறி இயந்திரம் மற்றும் சுகாதார பாவணைப்பொருட்கள் கையளிப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பரவியுள்ள கொவிட் வைரசை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய அரசாங்கத்தின் உதவிகளுக்கு புறம்பாக அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்ட செயலகத்துடன் கைகோர்த்து அவசியமான உதவிகளை வழங்கி ...

மேலும்..

கெளரவ ஜனாதிபதி,பிரதமர் வழிகாட்டலில் சர்வமத பிராத்தனை அனைத்து மதத் தலங்களில்

கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழிகாட்டலில் புத்த சாசன அமைச்சர் கெளரவ பிரதமர் மகிந்த ராசபக்ச ஏற்பாட்டில் சர்வமத பிராத்தனை (8) இன்று மாலை 5.46 மணியளவில் அனைத்து மதத் தலங்களில் இடம்பெறவுள்ளது. ஆலயங்களுக்கு சென்று இன் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதவர்கள் ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை கோடீஸ்வரனும் நானும் இணைந்து செய்தோம்-சுமந்திரன் எம்.பி

(பாறுக் ஷிஹான்) கல்முனை உப பிரதேச செயலக அமைச்சரவை பத்திரத்தை எவருக்கும் நான் கொடுக்கவில்லை. இது தொடர்பாக திரு கோடீஸ்வரனும்(முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) நானும் இணைந்து தான் எல்லா செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலக ...

மேலும்..

தலவாக்கலை,சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

(க.கிஷாந்தன்)   தலவாக்கலை, சென்கூமஸ் கிராம சேவகர் பிரிவு இன்று (7.5.2021) முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது - என்று லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.   அத்துடன், அப்பகுதியில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.   தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், ...

மேலும்..

அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ...

மேலும்..

யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டநாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் காவல்துறையினர் கைது! யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியானை உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்கள் 100 ஐத் தாண்டி நல்லடக்கம்

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் தெரிவு செய்யப்பட காணியொன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்கள் 100 ஐத் தாண்டி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்யும் பணிகள் மிகவும் சிறப்பான ...

மேலும்..

மட்டக்களப்பு வாகன விபத்தில் இரு இளம் வயதுடையோர் உயிரிழந்த சோகம்.

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு தனியார் பஸ் உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். பரமேஸ்வரன் ...

மேலும்..

தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் ...

மேலும்..

யாழில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21; வடக்கில் 27

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்.போதனா ...

மேலும்..

20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்!

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள ...

மேலும்..

முஸ்லிம் மாணவி சிங்கள மொழிப் பிரிவில் வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்!

2020 ஆம் ஆண்டுக்கான க. பொ. த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மட் சாதிகீன் பாத்திமா புஸ்ரா வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி ...

மேலும்..

வடக்கில் கொரோனா நோயாளர்களுக்காக மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் நேற்று முதல் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது

(பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் வியாழக்கிழமை(6) இரவு  மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் ...

மேலும்..