May 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் …

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட "நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான"  போட்டித் தேர்வில்  “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர்  பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் இன்று இனங்காணல்…

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 31 ஆண்களும் 30 பெண்களும் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக கந்தளாய் 15, பதவி சிரிபுர 10, ஹோமரன்கடவெல 9, மூதூர் 9, சேருவில 7, ...

மேலும்..

வாழைச்சேனையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா…

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட மருதநகர் கிராமத்தில் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கியவர்களுக்கு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட  அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்  தெரிவித்தார். வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படாது – இராணுவத் தளபதி

நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யூன் 01ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ...

மேலும்..

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன-மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் ...

மேலும்..

கொத்மலை உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

(க.கிஷாந்தன்) கொத்மலை நியகங்தொர பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அங்கு பணிப் புரிந்த ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர்.பரிசோதனைகள், பொதுச்சுகாதார பிரிவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ...

மேலும்..

நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு

நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளது. இருப்பினும் , 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து 19 மணிநேரத்திற்கு பயண தடை விலகிக் கொள்ளப்படும். அன்றிரவு 11 மணியிலிருந்து மீண்டும் அமுலுக்கும் ...

மேலும்..

நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்..!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. X-PRESS PEARL என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது, கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்கு மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது…

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்கு குறுக்கு வீதியில் மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை இன்று (21.05.2021) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ...

மேலும்..

நுவரெலியா – இராகலையில் ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயம் – இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

(க.கிஷாந்தன்)   42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற  'ட்ரெக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21.05.2021) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.   இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள ...

மேலும்..