May 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அறிமுகப்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டியில் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி!

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களை வைப்பதற்காக சுமார் 4,500 ரூபாய் பெறுமதியான அட்டைப்பெட்டியில் ஆன சவப்பெட்டி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையினால் கடந்த தினம் குறித்த சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினரான பிரியந்த சஹபந்துவின் எண்ணத்துக்கு அமைய ...

மேலும்..

எதிர்வரும் 31 ஆம் திகதி, அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் வாகனங்கள் !

அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் ,இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர ...

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன-வைத்தியர் கேதீஸ்வரன்!

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சீனத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ...

மேலும்..

மட்டக்களப்பு – வாகரையில் சௌபாக்கிய நிகழ்ச்சிதிட்டத்தின் விவசாய தானியப் பயிர் செய்கை அறுவடை விழா!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ்  இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்ட  பயறு அறுவடை விழா மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கதிரவெளியில் இடம்பெற்றது. வாகரை பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது: கிராமத்தில் இருந்து வெளியேறத் தடை…

வவுனியா, திருநாவற்குளத்தின் பாதுகாப்பானது இன்று (29.05) மாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொவிட் மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை-செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானம்

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி!

நாளையும் ,நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும். அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதற்கான அனுமதி உணவு ,காய்கறி ,மீன் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளை விநியோகிக்கும் லொரி ...

மேலும்..

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அம்மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (29)  இடம்பெற்றது. குறித்த கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகள் முடக்கம்

(க.கிஷாந்தன்) கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (29.05.2021) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 26ம் திகதி ...

மேலும்..

இராணுவத்தினரின் மனிதாபிமான பணி-ஆலையடிவேம்பில் வருமானம் குறைந்த குடும்பமொன்றின் வீடமைப்பிற்கான அடிக்கல் நடப்பட்டது

(வி.சுகிர்தகுமார் )   நாட்டில் நிலவும் இக்கட்டான இச்சூழ்நிலைக்கு மத்தியிலும் இராணுவத்தினர் மனிதாபிமான பணிகளை தொடர்ந்தும் முன்னெத்து வருகின்றனர். இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் முற்றும் முழுதாக இராணுவத்தினரால் நிர்மானிக்கப்படவுள்ள வருமானம் குறைந்த குடும்பமொன்றின் வீடமைப்பிற்கான அடிக்கல்லை இன்று நாட்டி வைத்தனர். அக்கரைப்பற்று இராணுவ ...

மேலும்..

காரைதீவு சுகாதார வைத்திய பிரிவில், கொரோனா சட்டதிட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

நூருல் ஹுதா உமர் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் மாவடிப்பள்ளி பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் இன்று (29) மாவடிப்பள்ளி கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய மண்டபத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தின் கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) முற்பகல் அறிவுறுத்தினார். கப்பல் தீவிபத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை விடுத்து கொவிட் தொற்றை ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்யுங்கள்-.கருணாகரம் (எம்.பி)

தற்போயை நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கொவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

வீட்டை விட்டு தப்பி ஓடிய கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன்;தகவல் கிடைத்தால் அறிவிக்கவும்

பொரள்ள பொலிஸ் பிரிவில் உள்ள மெகசின் வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தமக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். மெகசின்  பகுதியில் உள்ள சங்கீத் தனுஸ்க என்ற 28 வயதுடைய இளைஞனுக்கு தொற்று இருப்பது ...

மேலும்..

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து உயிரிழப்பு!

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும்..

திருமலை வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான பி.சி.ஆர் இயந்திரமொன்றை உடனடியாக அனுப்பிவைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப்படுவதாகவும் தேவை கருதியே ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலை காரணமாக 1199 தொற்றாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மூன்றாவது அலை காரணமாக 1199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான சிபார்சினை தேசிய கோவிட் ...

மேலும்..

கிழக்கில் கொவிட் சிகிச்சைக்காக முதலாவது ஆயுர்வேத – அலோபதி சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

(பைஷல் இஸ்மாயில்) கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஒன்று திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை (28) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ...

மேலும்..

பல்கலைக்கழக விண்ணப்பத்துக்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நடமாட்டக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தககடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று காவல்துறைப் பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும்..

கொரோனா தடுப்பூசி ;வட்ஸ்அப் அல்லது குறுஞ் செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ...

மேலும்..

பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (28) பிற்பகல் 2. 30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ் விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும்,  கெப் ரக ...

மேலும்..

சம்மாந்துறையில் கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படிருத்தல் வேண்டும் :  பிரதேச செயலாளர் ஹனிபா வர்த்தகர்களுக்கு அறிவிப்பு!

(ஐ.எல்.எம். நாஸிம் ) சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளார் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில் இன்று (28) மாலை இடம் பெற்றது. இக்கலந்துரையாடலின் போது பிரதேசத்தின் ...

மேலும்..

இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . இருப்பினும், வாடிக்கையாளர்கள் இதற்காக வருவது சாத்தியமில்லை . சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம் – பண்ணையில் உள்ள மாவட்ட சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுகாதார ...

மேலும்..