June 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐக்கிய மக்கள் சக்தி;உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் !

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே அடுத்த ...

மேலும்..

சைக்கிளில் வந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற திருடன்!

சைக்கிள் ஒன்றில் வந்த நபரொருவர், ஓர் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்கிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாப் பிச்சை வீதியில் நேற்றிரவு ((14) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரின் EP –BCV 8533 எனும் இலக்கமுடைய ...

மேலும்..

சுருவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!

ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வன ஜீவராசிகள் ...

மேலும்..

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது. இவ்வாறு கரைக்கு வந்த பொருள் வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு சம்பவம் ...

மேலும்..

நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதி நிர்மாணிக்க அடிக்கல் நடும் நிகழ்வு

(  பாறுக் ஷிஹான்) நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையில் 13 மில்லியன் ரூபாய் செலவில் வலது குறைந்தவர்கள் மற்றும் பக்கவாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள நோயாளர் விடுதிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  திங்கட்கிழமை(14) இடம்பெற்றது. நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை வைத்திய ...

மேலும்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவின் பிரதானியாக மேனகா நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப்பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில் - துறைசார் கல்வியைக் கற்றவராவார். 15 வருட கால தனது ஊடக வாழ்வில் ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாவை சந்திக்கிறது கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள்!

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் புணாணை சந்திவெளி கொக்குவில் கர்பலா ஆகிய இடங்களிலேலே இந்தப் புதிய பொலிஸ் நிலையங்கள் இயங்கவுள்ளன. புதிய பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியை பொலிஸ் ...

மேலும்..

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம்

  களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில், மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நேற்று (14) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில் இன்றைய தினம் காலை (15) உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை ...

மேலும்..

நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(க.கிஷாந்தன்) பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி ...

மேலும்..

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் ...

மேலும்..

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்

இந்தியாவில் ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் நேற்று (14) பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்கும் பணிகளில் ...

மேலும்..

அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்!

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்ததாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடல் கொந்தளிப்பாக ...

மேலும்..

மட்டக்களப்பில் 8 மீனவர்கள் கைது; 3 இயந்திர படகுகள் மீட்பு

மட்டக்களப்பில் இருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேரை, நேற்று (14) இரவு கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளதுடன், மீட்கப்பட்ட 3 இயந்திரப் படகுகளையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் வழமைபோல கடலில் ...

மேலும்..

யாழில் கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் ...

மேலும்..

ஆயுள் வேத பொதிகள் விநியோகத் திட்டம் ஆரம்பம்

நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நிந்தவூர் ஆயுள் வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.எல். நக்பர் அவர்களினால் தொடர்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கொவிட் 19 தடுப்பு ...

மேலும்..