July 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் – டக்ளஸ்

பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை இன்று(புதன்கிழமை) ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் 48 பேருக்கு கோரோனா!

வல்வெட்டித்துறையில் இன்று 38 பேர் உட்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இன்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் ...

மேலும்..

கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் ஆறாவது நாளாக போராட்டம்

கடந்த 08.07.21 அன்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்த்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட ...

மேலும்..

நாளை திருகோணமலை மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு

அவசர பிரதான நீர் குழாய் திருத்த வேலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் குழாய் நீர் வெட்டு 12 மணி நேரம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார். குறித்த நீர் வெட்டானது ...

மேலும்..

வவுனியா,நெடுங்கேணியில் ஆணின் சடலம் மீட்பு

  வவுனியா வடக்கு - நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த சடலமானது பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவினைச்சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் வயது - 60 என்பவருடையது என இனங்காணப்பட்டுள்ளது. குறித்த நபர் 13.07.2021 நேற்று மாலை, ...

மேலும்..

நிரந்தரமாக்க கோரி கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள்போராட்டம்!

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று (14) நண்பகல் உணவு விடுமுறை காலப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கல்முனை பிராந்திய ...

மேலும்..

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு – சவேந்திர சில்வா!

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளையும் ...

மேலும்..

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அனூப பெல்பிட அவர்கள்  பிரதமரிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றார்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.அனூஷ பெல்பிட அவர்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும்  பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இன்று (14) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இணைந்த சேவைகள் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் பூரண குணமடைவு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் குணமடைந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

மேலும்..

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (14.07.2021) ஆரம்பமானது. தோட்ட மற்றும் நகர் புற பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் ...

மேலும்..

யாழ் மீசாலை பகுதியில் வாள் வெட்டு!

யாழ். மீசாலைப் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு ...

மேலும்..

யாழ். மாவட்டத்திற்கான நன்னீர் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக் கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான ...

மேலும்..

அம்பாறை வைத்தியசாலை கொரோனா அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெண்டிலேட்டர் வழங்கிவைப்பு.

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட திறன் வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்கள் இடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 35 லட்சம் பெறுமதியான வெண்டிலேட்டர் உபகரணம் செவ்வாய்க்கிழமை (13) அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் உப்புல் விஜயநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ...

மேலும்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நேற்றையதினம் நியமிக்கப்பட்டார். அவர் இன்றையதினம் உத்தியோக பூர்வமாக ...

மேலும்..