July 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இஷாலினி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த இஷாலினி தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இஷாலினியை, ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள அறையொன்றில் தனியாக தங்க வைத்திருந்தமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை ...

மேலும்..

வீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டன. கடற்படையினின் ரோந்து அணியை கண்ட ஒருவர் அருகிலுள்ள புதருக்குள் ...

மேலும்..

மன்னாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கருப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம்  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது. இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், ...

மேலும்..

படுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்…!

  இலங்கையில் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்தகாலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை ...

மேலும்..

அராலியில் அராஜகம் செய்த வாள்வெட்டு குழு..!!

யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர். இதனால் ...

மேலும்..

காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் அல்- ஜலால் பாடசாலைக்கு முன்னாலும் இன்று காலை கிழக்கு மாகாண ...

மேலும்..

முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்த அறிவிப்பு !

வரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தெதுறு ஓயாவில் இடம்பெறும் தீர்தோற்சவ நிகழ்வுடன் வருடாந்த ...

மேலும்..

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும் முதியவர் இதய நோய் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. யாழ்ப்பாண காவல்துறையினரினால் ...

மேலும்..

டயகம சிறுமி மரணம் – ரிஷாத்தின் மனைவி உட்பட மூவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த ...

மேலும்..