July 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு!

வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த 20 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் முன்பு ஏற்றிருந்த பொறுப்புக்களை கையளித்த பின்னர் இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதமசெயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை ...

மேலும்..

ஜனாதிபதி – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாளர்களுக்கு அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்படும் ...

மேலும்..

மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை !

மிக நீண்டநாள் தேவையாக இருந்து வந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜவாத் மரைக்கார் வீதிக்கு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இணைப்புக்கள் வழங்கப்பட்டது. பிரதேச சபையினுடைய சகல வீதிகளுக்குமான நீர்க் குழாய்களை இணைக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஜவாத் மரைக்கார் வீதி ...

மேலும்..

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அதிகபட்ச விலை மாவட்ட ரீதியில் நிர்ணயம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பாக விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.  அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டரிலும் அதன் எடை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது சிலிண்டரில் எடையை குறிப்பிடாமல் சமையல் எரிவாயு நிரப்புதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம், சில்லறை மற்றும் மொத்த விலைக்கு ...

மேலும்..

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் ...

மேலும்..

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது கடமைகளை சமன் பந்துலசேன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன, ஜனாதிபதி ...

மேலும்..

மலையகத்து அரசியல், சட்ட, சிவில், வர்த்தக செயற்பாட்டாளர்கள் கூட்டிணைந்து சவால்களை சந்திக்க வேண்டும் – மனோ கணேசன்

மலையக தமிழ் சமூகம் இன்று சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், சமூகம் எழுச்சி பெறவும்  மலையகத்தின் முக்கிய நான்கு சமூக கூறுகளான  அரசியல் செயற்பாட்டாளர்கள், சட்டத்துறை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொன்றும் தமக்குரிய பணியை கூட்டுபொறுப்படன் நிறைவேற்ற ...

மேலும்..

இன்றைய ராசி பலன் எப்படி உங்களுக்கு..?

மேஷம் இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். ...

மேலும்..

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் இன்று (26), மட்டக்களப்பு பாரதி வீதி அருணோதயம் வித்தியாலயம், சிசிலியா பெண்கள் உயர்பாடசாலை, கல்லடி சிவானந்தா வித்தியாலயம், சின்ன ...

மேலும்..

போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு

கிரிபத்கொட, வேவல்தூவ பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்றை காவற்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றது-சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன

இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.   மேலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அசேல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

O/L பரீட்சை பெப்ரவரி மாதம் நடைபெறும்

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.   அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் 03 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என ...

மேலும்..

வில்வம் இலையில் இவ்வளவு மருத்துவ குணமாம்!

சித்தம் தெளிவிக்கும் வில்வம்! யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் மந்திரத்தில் ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று குறிப்பிடப்படும் வில்வம் சிவ மூலிகைகளுள் சிகரம் மான மூலிகையாகும் மூன்று இதழ்களைக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண் குறிப்பதாக ...

மேலும்..

ஆலயம் சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த விதி!

  திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், அவரது கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் திருகோணமலையைச் சேர்ந்த பாமதி ஞானவேல் என்ற ஆசிரியையே பலியாகியுள்ளதுடன், அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7 வயதான பிள்ளை திருகோணமலை ...

மேலும்..

ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரு பெண்களின் மர்ம மரணம் அம்பலம்!

ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த போது உயிரிழந்த 16 வயதுச் சிறுமியைத் தவிர்த்து, ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொள்ளும் சிறப்பு பொலிஸ் குழு தெரிவித்துள்ளது. குறித்த இரு பணிப்பெண்களில் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுடன், மற்ற பெண் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற ...

மேலும்..

நாடு முழுமையாக திறக்கப்படுவது குறித்த அமைச்சரின் அறிவிப்பு!

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த பாரிய மைல்கல்லை எட்டிய பின்னர் நாடு மீண்டும் முழுவதுமாக திறக்கப்படும் என்றும் கூறினார். புலத்சிங்கள பிரதேசத்தில் நேற்று புதிய சதோச கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதை குறிப்பிட்டார். செப்டம்பர் மாதத்திற்குள், 30 ...

மேலும்..

சதுப்புநிலகாடுகள் தினம் (26 ஆடி 2021)

சதுப்புநிலகாடுகள் தினம் (26 ஆடி 2021) ‘இயற்கைத் தரும் தடுப்புச் சுவர்கள் சதுப்புநிலக்காடுகளே!’ சதுப்புநிலக்காடுகளுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில் சில சுந்தரவனக்காடுகள், அலையார்த்திக்காடுகள், கண்டல்காடுகள் சதுப்புநிலகாடுகள் என்றும் ஆங்கிலத்தில்; ( mangrove forests ) மங்ரோங் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது. சதுப்புநிலக் காடுகள் கடல் அலைகளிலிருந்தும், கடல் அரிப்புகளிலிருந்தும், சூறாவளிகளிலிருந்தும் நிலப்பரப்புகளை மட்டும் பாதுகாக்கவில்லை சுனாமி ...

மேலும்..