August 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மை…

(க.கிஷாந்தன்) அட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று 19.08.2021 வியாழக்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர். எனினும் அனைத்து ...

மேலும்..

லொறிகளில் களவாடிய கும்பல் ஒன்று நோர்வூட்டில் சிக்கியது!

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன்டிலரி பகுதியில் நீண்ட காலமாக உணவு பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் கொண்டு சென்ற லொறிகளில் களவாடிய கும்பல் ஒன்றினை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நேற்று (18) அதிகாலை களவாடிய ஒரு தொகை ...

மேலும்..

கல்முனையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங் களுக்கு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கி வைப்பு…

இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை (200000)மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார்மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் "சமூர்த்தி அருணலு" (வாழ்வாதார அபிவிருத்தி) தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது இதனடிப்படயில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலக பிரிவில்உள்ளகல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய பிரிவில் தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் ஆரம்ப  நிகல்வு கல்முனைக்குடி சமூர்த்தி  வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இன்று (19)இஸ்லாமாபாத் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாககல்முனை பிரதேச செயலாளர் ஜே . லியாக்கத் அலி ,கல்முனை பிரதேச  செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர்  ஏ. ஆர். எம். சாலிஹ் ,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, மாவட்டசமூர்த்தி  கணக்காய்வு உத்தியோகத்தர் என். டினோசன் ,  வலய உதவி முகாமையாளர். எஸ். எல். அசிஸ்கருத்திட்ட உதவியாளர்  எ. எஸ். எம்.ஜவ்பர்  சமூர்த்தி உத்தி யோகத்தர் ஐ. எல்.அர்சதின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி பத்திரம் மற்றும் தென்னங் கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

மேலும்..

நிந்தவூர் வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.

நாட்டில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் 3வது அலையினை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில் அரசு நாட்டை முற்றாக முடக்குவது தொடர்பில் எந்தவிதமான விசேட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது அதிகமான உயிரிழப்பை சந்திக்க வழிவகுக்கும் எனும் கோரிக்கையை ...

மேலும்..

கொட்டகலையில் உள்ள கடைகள் இன்று முதல் ஒரு வாரம் மூடப்படும்…

(க.கிஷாந்தன்) கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முகமாக கொட்டகலை பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று (19) முதல் மூட கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு கொட்டகலையில் உள்ள ...

மேலும்..

12 மரணங்களுடன் நிந்தவூர் ஆபத்தான நிலையில் : மக்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள சுகாதார அதிகாரி டாக்டர் பறூசா !

நிந்தவூரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் குறித்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் ...

மேலும்..

ஆயிரம் ஜோன்ஸ்டன்கள் வந்தாலும் பொய் உண்மையாகாது. கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி

ஒருவர் மீது வீணாக சுமத்தப்படுகின்ற பொய்க் குற்றச்சாட்டுகளை ஆயிரம் ஜோன்ஸ்டன் களாலோ,  ஆர்ப்பாட்டங்களாலோ, ஊடக அறிக்கைகளாலோ நீதியின் முன் உண்மையாக்க முடியாது என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். ...

மேலும்..

டீன் ஸ்டார் விளையாட்டு கழக சீருடையை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் அகமட் ஸகி…

அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த புதிய சீருடை அறிமுக நிகழ்வு புதன்கிழமை (18) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது. குறித்த ...

மேலும்..

சம்மாந்துறை ரியல் மெட்ரிக் விளையாட்டு கழக சீருடை அறிமுக நிகழ்வும் வீரர்கள் கௌரவிப்பும் !

சம்மாந்துறை ரியல் மெட்ரிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் வீரர்கள் கௌரவிப்பும் சம்மாந்துறை தனியார் விடுதியில் ரியல் மெட்ரிக் விளையாட்டுக்கழக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா பிரதம ...

மேலும்..

தலைக்கு மேலால் ஓடுகிறது வெள்ளம் : தங்களை காப்பாற்ற மக்களே சுயமுடிவை எடுத்து தாமாக முடங்க வேண்டும்…

நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் கொரோனா பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கல்முனை பிராந்தியத்திலும் தொற்று நிலைமை மிகமோசமாக பரவிக் கொண்டிருக்கின்றது. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஆறு நபர்கள் மரணித்து விட்டிருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தின் அபாய நிலைமையை மரணத்தின் எண்ணிக்கை  மூலமே அறியக்கூடியதாக ...

மேலும்..

யாழ் கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருட்டு !!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு முதலாம் குறுக்கு தெரு வீதி வீடு ஒன்றில் பணம் மற்றும் கைத்தொலைபேசி   திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு முதலாம் குறுக்கு ...

மேலும்..

யாழ் அரியாலையை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் மரணம்!

  யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது அறியமுடிகின்றது.

மேலும்..