August 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 23ஆயிரத்து 390 ஆக ...

மேலும்..

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கருத்து வௌியிட்ட தொழிற்சங்கவாதி கைது…

தேசிய சேவை சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாகவும் ஊடக சந்திப்பு நடத்தி ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து ...

மேலும்..

நாட்டில்198 பேர் கொரோனா வைரஸிற்கு பலி!

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்கள் 7183 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும்..

இம்முறை 5000ம் ரூபா நிவாரணம் இல்லை வெறும் 2000ம் ரூபாதான்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் குறைந்த வருமானம்  பெரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் ...

மேலும்..

அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்தில் இரு வல்லரசுகளின் களமாக மாறியஆப்கானிஸ்தான்.

இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு அமெரிக்கா – சோவியத் யூனியன் ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒன்றையொன்று வீழ்த்துகின்ற வியூகத்தில் அதிஉச்ச பனிப்போர் நிலவியது. அமெரிக்க புலனாய்வாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்படுவதும், அதுபோல் ரஷ்யாவின் புலனாய்வாளர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படுவதும் அப்போதைய ...

மேலும்..

தலையைச் சுற்ற வைக்கும் தலிபான்களின் சர்வதேச உறவு? -சுஐப் எம்.காசிம்…

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை ...

மேலும்..

யாழ் கல்வியங்காட்டில் நண்பகலில் கைவரிசையை காட்டிய திருடர்கள் -இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது தப்பியோட்டம் !!!

நாட்டில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டிருந்த நேரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வேளாதோப்பு வீட்டொன்றில்  இன்று (21) சனிக்கிழமை நண்பகல் 01.30 மணிக்கு பழைய இரும்பு பொருட்கள்  திருடிய  இனந்தெரியாத இரு நபர்களை குறித்த பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முயற்சி செய்த ...

மேலும்..

சில கழகங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை தவிர்க்கப்பட்டு பொது மைதானத்தை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்- ஏ.எல்.எம்.சலீம்

பொலிவேரியன் மைதானம் அனைவருக்கும் பொதுவானது; பேதங்கள் மறந்து அனைத்து கழகங்களும் மைதான அபிவிருத்தியில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நான் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டதே சாய்ந்தமருது போலிவேரியன் அஷ்ரஃப்  ஐக்கிய விளையாட்டு அரங்கு ஆகும். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் ...

மேலும்..

பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் : கல்முனை பிராந்திய பணிப்பாளர் சுகுணன் உறுதியளிப்பு !

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ...

மேலும்..

கல்முனையில் கெளபி அறுவடை…

( எம். என். எம். அப்ராஸ்) ‘சௌபாக்கியா’  வேலைத்திட்டத்தின் கீழ் உப உணவு பயிர் செய்கை மேற் கொள்ளும் விவசாயிகளுக்குவிவசாய திணைக்களித்தினால்  நாடளாவிய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின்வழிகாட்டலில் ,கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட கல்முனை அன்பு சகோதரஇல்லத்தில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட கெளபி அறுவடை செய்யும்  நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது. குறித்த அறுவடையானது மறு பயிர் செய்கைவிவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச் .ஏ.நிஹார்  , கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய நிலைய பிரதம போதனாசிரியர் திருமதிஎஸ்.கிருத்திகா, விவசாய போதனாசிரியர் என் .யோகலக்ஷ்மி ஆகியோரின்  மேற்பார்வையில் இடம்பெற்றது . இதேவளை குறித்த இடத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன்னர் கல்முனை விவசாய விரிவாக்கல்  நிலையத்தின் வழிகாட்டலில், உப உணவு பயிர் செய்கையில் ஒன்றான  உளுந்து  முதன் முதலாக பயிரிடப்பட்டு  நல்ல விளைச்சல் பெறப்பட்டு அறுவடை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது .

மேலும்..

பொதுமுடக்கம் காரணமாக கிளினிக் மருந்துகள் தபாலகமூடாக விநியோகம் ! மருந்தகங்கள் திறந்துள்ளன !!

நாட்டில் நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால் நீண்டகால நோய்வாய்ப்பட்டோர், கிளினிக் மூலம் மருந்துகளை பெறுவோரின் நன்மைகருதி தபால் திணைக்கள தபாலகங்கள் ஊடக மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...

மேலும்..

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் மீது பொலீசார் கடும் நடவடிக்கை !

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மக்கள் முழுமையாக அனுசரித்து வருகின்றனர் நேற்று இரவு 10 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன அத்துடன் வீதிகளில் பொலிசார் ...

மேலும்..

கல்முனை நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்…

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை நகரங்களின் இயல்புநிலை நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் ஸ்தம்பிதமடைந்தது. . தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை ...

மேலும்..

மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்.

(க.கிஷாந்தன்) நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தல் ...

மேலும்..

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, கல்வெட்டுகளையும் ...

மேலும்..