August 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊரடங்கு நீடிப்பா? இல்லையா? வெள்ளிக்கிழமை தீர்மானம்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி நாளை மறுநாள் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை  ஊடக சந்திப்பில் கூறினார்.

மேலும்..

6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு…

நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ,தொற்றுக்குள்ளாவோரின் தொகையும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் அச்சமான சூழ்நிலையில் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் வரும் முன் காக்கும் ...

மேலும்..

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை 21.5% முதல் 26.8% ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன என்பதை ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி..

ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக வங்கி கடந்த ...

மேலும்..

விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக விகாரையில் தங்கியிருந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரம பிக்கு கைது –மட்டு ஏறாவூர் புன்னைக்குடா விகாரையில் சம்பவம்

மட்டக்களப்பு ஏறாவூhர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை இன்று புதன்கிழமை (25) கைது செய்துள்ளதாக  ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பிறமாவட்டத்தைச் சேர்ந்த ...

மேலும்..

நாட்டில் நிவும் கொவிட்-19 பதற்றமான சூழலில் பிரம்மாண்டமாக இடம்பெறும் பெரகெர; நாட்டில் தொற்றாளர்கள் அதிகரிப்பிற்கு காரணம் அரசே – ரவிகரன்…

தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 பதற்றமான சூழலில், நாம் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுபாரிய அளவில் நிகழ்வுகளையோ, போராட்டங்களையோ மேற்கொள்வதைத் தவிர்த்துள்ளோம். இந் நிலையில் தெற்கில் பிரம்மாண்டமாக பெரகெர நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பிற்கு காரணம் தற்போதுள்ள அரசாங்கமே ...

மேலும்..

வன்னி மண்ணின் மன்னன் பண்டாரவன்னியனின் 218 ஆவது வெற்றி நாளில் முல்லைத்தீவில் அஞ்சலி !

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாளான (25)இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. கோவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலாளராக அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ எம் லத்தீப் கடமையேற்பு !

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஏ எம் லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக இன்று (25) புதன்கிழமை கடமையேற்றுக் கொண்டார். நிர்வாக சேவையில் பன்முக ஆளுமை கொண்ட சட்டத்தரனியும் கல்விமானுமாகிய ஏ.எம். அப்துல் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏனையவர்களை நாட்டிற்க அழைத்துவரும் ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் – பரிந்துரைகளை முன்வைக்க குழு நியமனம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் ...

மேலும்..

ஒருமாத கொடுப்பனவு நன்கொடை: நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர்கள் அறிவிப்பு…

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஓகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!

சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க ...

மேலும்..

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 17 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3 இலட்சத்து ...

மேலும்..

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகம்

கொரோனா வைரஸிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இந்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன…

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். தடுப்பூசி ஏற்றும் மத்திய ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலக புதிய பிரதேச செயலாளராக அல் ஹாபிழ் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் கடமையேற்பு !

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக அல் ஹாபிழ் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி)  இன்று (25) புதன் கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அக்கரைப்பற் று பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில் இன்று புதன் கிழமை முதல் இறக்காமம் ...

மேலும்..

ஒன்பது வருடம் சேவையாற்றிய பிரதேச செயலாளரை தேடிச் சென்று பாராட்டிய அக்கரைப்பற்று முதல்வர்…

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றி இறக்காமம் பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.எஸ்.எம்.றஸானை  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சந்தித்து சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக அன்சார் (நளீமி) இன்று கடமையேற்பு…

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக காத்தான்குடியை சேர்ந்த ரீ.எம் எம் அன்சார் (நளீமி) இன்று 2021.08.25 காலை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சுமார் நான்கு வருடங்களாக நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த இவர் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக பொது நிர்வாக ...

மேலும்..

அதிரடி நடவடிக்கை : ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை !

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் மேற்கொண்ட 46 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்து நெகட்டிவாக வந்துள்ளது. என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...

மேலும்..

நிந்தவூரில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் சேவை ஆரம்பம்.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமானது இரானுவத்தினரின் பங்களிப்புடன்  வீட்டுக்கு வீடு வழங்கப்படவுள்ளதனால் இது வரையிலும் கொவிட் தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்ளாத 60 வயதிற்கு மேட்பட்டோர் அனைவரும் உடனடியாக தங்களின் விபரங்களை ...

மேலும்..

கிண்ணியா பிரதேச சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தம்.

கிண்ணியா பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் செய்வாய் கிழமை(24) விடுத்துள்ளார். சபையில் கடமையாற்றும் சில ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதனால் சில தினங்களுக்கு சபையின் நடவடிக்கைகள் ...

மேலும்..