August 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு.

அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த திட்டம், நிந்தவூர் ...

மேலும்..

தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்தை வெல்லப்போவது யார் ? களத்தில் 10 அணிகள் !!

அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட அணிகள் ஆடுகளம் காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மலரும் தமிழீழம் எத்தகைய கொள்கை நிலைப்பாடுகளை கொண்டதாக அமையும் என்பதனை வலியுறுத்தி, அனைத்துலக சமூகத்தினை நோக்கி ...

மேலும்..

திருகோணமலையில் 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடு.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட ...

மேலும்..

ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா இயற்றிய ‘பாலை வனம்’ நூல் வெளியீட்டு விழா…

ஈழமணித்தீவின் தென்கரை வெலிகமையைச் சேர்ந்த, பன்னூலாசிரியரும் தீந்தமிழ்ப் புலவருமான,  மெய்ஞ்ஞானத் தமிழ்ஞானி, மூத்த இலக்கிய ஆளுமை ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா) இயற்றிய சங்க இலக்கிய உரை நூலான (ஐங்குறுநூறு வரிசையில் பாலைப் பாடலுக்கான உரை நூலான) ...

மேலும்..

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைகோ பாராட்டு…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (27.08.2021 ) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ...

மேலும்..

களுத்துறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கான இணையவழி (ZOOM) ஒருநாள் பயிற்சிப்பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்…

களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள், குறைபாடுகள் தீர்க்கப்படாத பல விடயங்கள் இன முரண்பாடுகள் காலாகாலமாக சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு களுத்துறை மாவட்டத்தில் மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலைக்கான காரணம், தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள், போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி உள்ள இளைஞர் சமுதாயம், ...

மேலும்..

மனஅமைதிக்கான பிரபல பயிற்றுவிப்பாளர் உமா பஞ்ச் கலந்து கொள்ளும் நிகழ்நிலை (Webinar) செயலமர்வு.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள உள அமைதியும் மன அழுத்த முகாமைத்துவமும் எனும் தலைப்பில்  வாழ்க்கை மற்றும் மனஅமைதிக்கான பிரபல பயிற்றுவிப்பாளர் உமா பஞ்ச் அவுஸ்திரேலியாவிலிருந்து கலந்து கொள்ளும் சூம்  ZOOM மூலமான ஆலோசனை வழங்கும் நிகழ்நிலை  (Webinar) செயலமர்வு நாளை (28) சனிக்கிழமை ...

மேலும்..

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு  தமிழ்நாட்டில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் 58,822 இலங்கைத் தமிழ் அகதிகளும்  முகாம்களுக்கு வெளியே 34,087 அகதிகளும் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.  “இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்,” என தனது உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர் ...

மேலும்..

கல்முனையில் கொரோனா விழிப்புணர்வு பதாகை திறப்பு…

கல்முனையில் கொரோனா விழிப்புணர்வு  பதாகைகள் திறத்து வைக்கப்பட்ட்து . கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை பகுதியில் பொதுமக்களுக்கு  கொரோனா தொற்று நோய்  தொடர்பில் விழிப்புட்டும் முகமாக கல்முனை கொரோனாதடுப்புசெயலனியின்  ஏற்ப்பாட்டில் கொரோனா தொற்று பற்றிய அறிவுறுத்தல்   அடங்கிய விழிப்புணர்வு பதாகை இன்று (27/8/2021) திறந்துவைக்கப்பட்டது. கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்றலில் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளி வாசல்  அருகாமையில் குறித்த பாதாகை திறந்து வைக்கப்பட்டது. இதன் போது கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏஅஸீஸ் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி , கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை வைத்தியசாலை அத்தியட்ச்சகர் ஏ. எல். எப். ரகுமான்,  241வது இராணுவப்பிரிவின்கட்டளை அதிகாரி ,கல்முனைப் பிராந்திய இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோன், வைத்தியர்களான ஏ. எல். பாறுக் , ஜெசிலுல் இலாஹி, கல்முனை தெற்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஏ. எம். பாறுக் உட்பட கல்முனை கொரோனா தடுப்புசெயலனி உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்..

ஊருக்கு துரோகம் இழைப்பவர்கள் வெளியேறவேண்டும்! காரைதீவு சுயேச்சைக்குழு ஸ்தாபக உறுப்பினர்கள் வேண்டுகோள்…

(வி.ரி.சகாதேவராஜா) மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவேன் ,ஊருக்கும் எமது குழுவுக்கும் கட்டுப்படுவேன் என்று கூறிச்சென்ற உறுப்பினர் குமாரசிறி ,தற்போது ஊருக்கும் குழுவுக்கும் கட்டுப்படாமல் மாற்றானுடன் கைகோர்த்து காட்டிக்கொடுத்து ஊரை தாரைவார்த்துக்கொடுக்க முற்பட்டுள்ளார். உடனடியாக அவர் வெளியேறவேண்டும். இவ்வாறு காரைதீவு மீன்சின்ன சுயேச்சைக்குழுவின் ஸ்தாபக சிரேஸ்ட உறுப்பினர்கள் ...

மேலும்..

சதொசவில் சீனி 120 ரூபாய்க்கு விற்பனை : கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு !!

நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இலங்கை உற்பத்தி  பால்மா உட்பட ...

மேலும்..

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 209பேருக்கு கொரோனா…

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 201ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ...

மேலும்..

நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர-ப.உதயராசா!

நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார் மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக ஊடக அறிக்கை ஒன்று சிறிரெலோ கட்சியின் ...

மேலும்..

நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை.

நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஆரம்பமான சீனாவை விட இலங்கையில் மரணங்கள் இரண்டு மடங்கு அதிகரித்து விட்டதாகவும் இதுவரையில் 9,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச ...

மேலும்..

செப்டெம்பர் 6ம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு! சற்று முன் வௌியான அறிவிப்பு…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இலங்கை தமிழர் நலனுக்கு 30 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இலங்கை தமிழர்கள் வசிப்பதற்காக தமிழகத்தில் பல இடங்களில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் வசித்து வருகிறார்கள். இலங்கை அகதிகள் முகாமில் ...

மேலும்..

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திடுக! வைகோ வேண்டுகோள்…

மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர்,  ஊற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மணப்பாறை ...

மேலும்..

சுகாதாரத்துறையினருடன் பாதுகாப்பு துறையினர் இணைந்து சாய்ந்தமருதில் நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை…

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு துறையினரும் இணைந்து இன்று (27) சாய்ந்தமருது பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது ...

மேலும்..

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : சுகாதாரத்துறைக்கு பக்கபலமாக படைவீரர்களும் களத்தில்.

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும்  தடுப்பூசிகள் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை,  நாவிதன்வெளி ...

மேலும்..

சீனாவில் இருந்து 96,000 மெட்ரிக் டொன் சேதன பசளை இறக்குமதி செய்ய முடிவு…

நாட்டுக்குத் தேவையான 96,000 மெட்ரிக் டொன் சேதன பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சேதன பசளை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்கீழ் 10% நைட்ரிஜன் உள்ளடங்கிய சேதன பசளை, நைட்ரிஜன் 15% ...

மேலும்..

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களில் விலை மேலும் அதிகரிக்கூடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அந்தளவு சுலபமான விடயமல்ல என அவர் கூறியுள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் பேசியதாகவும் இது எமது நாட்டில் மாத்திரம் ...

மேலும்..