September 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள்.

தங்கள் கூட்டாளருடன் படுக்கையில் பல விஷயங்கள் செய்ய வேண்டுமென்று அனைவருக்குமே பல ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். ஆனால் அதைப்பற்றி விவாதிக்கவோ, தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தவோ வெட்கப்படுகிறார்கள். இது பெரும்பாலும் பாலியல் அதிருப்திக்கு காரணமாகிறது, இது குறைந்த சுயமரியாதை, சுய உணர்வு, உடல் உருவ சிக்கல்கள் மற்றும் பயனற்ற உணர்வை ஏற்படுத்தும். நமது ஆசைகளைப் பற்றி வெளிப்படையாக இருப்பது ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டு வந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார். சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வேலுபிள்ளை குமார் பஞ்சரத்னம் என்ற ஜோர்ஜ் மாஸ்டர் மாரடைப்பு காரணமாக இன்று தனது 85வது வயதில் உயிரிழந்தார்.

மேலும்..

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் 3,030,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முப்பது இலட்சத்து முப்பது ஆயிரம் (3,030,000) ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள்  (2021/09/02) அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இந்த உபகரணங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு ...

மேலும்..

புத்தளம் கற்பிட்டியில் 1,026 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது! நால்வர் கைது…

கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். அத்துடன், இந்தந் சுற்றிவளைப்பின்போது நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் கற்பிட்டி பொலிஸ் ...

மேலும்..

75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி…

சுதந்திரத்தின் பின்னர் அதிகக் காலம் நாட்டை ஆட்சி செய்த முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

‘காய்ச்சல் ஏற்பட்டால் டெங்குவாக இருக்கலாம்’

இந்த நாட்களில் காய்ச்சல் காணப்படுமாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கக்கூடுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காலை 6 மணியிலிருந்து 11 வரையிலும், மாலை 03 ...

மேலும்..

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு.

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் குறைவடைந்தமையின்  காரணமாக, செப்டம்பர் 1ஆம் திகதி ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. மத்திய ...

மேலும்..

அம்பாறையில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு.

அம்பாறை- கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில், எல்.எம்.ஜீ. துப்பாக்கி மற்றும் உள்ளூர் துப்பாக்கிகள் ஆகியவற்றை மீட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற  விசேட புலனாய்வு பிரிவினர், அங்கிருந்த மலசல ...

மேலும்..

4 மாவட்டங்களில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!

நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை தடுப்பூசி செலுத்தப்படுமென ...

மேலும்..

தட்டுப்பாடு நிலவும் பொருட்கள் வரிசையில் கோதுமை மாவும் இணைவு.

சந்தையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. ப்ரிமா நிறுவனம் சமீபத்தில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாயால் உயர்த்திய பின்னர் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி ப்ரிமா நிறுவனம் கோதுமை ...

மேலும்..

இலங்கை ராஜதந்திரியின் அமைச்சரவை அந்தஸ்தை நீக்குமாறு இந்தியா அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்தை  ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முதலாவது உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டார். அவர் தற்போது இந்தியாவில் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் இந்திய ஜனாதிபதியிடம் தனது ...

மேலும்..

நுவரெலியாவில் கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்கள் கைது…

(க.கிஷாந்தன்) நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில், கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை, கந்தப்பளை பொலிஸார், கைது செய்துள்ளனர். கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இளைஞர்களின் வீட்டுப் ...

மேலும்..

கொவிட் 19 சிகிச்சை நிலைய கட்டிடம் திறப்பு…

(க.கிஷாந்தன்) அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலைய கட்டிடம் இன்று (05) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த கொவிட் கட்டிடத்தை ...

மேலும்..

யாழ் கல்வியங்காடு பிரபல வர்த்தக நிலையத்தில் கொள்ளை !!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தற்போது அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள   பிரபல வர்த்தகநிலையம் ஒன்றில் நேற்றிரவு  (04)  கொள்ளை  இடம்பெற்றுள்ளது. கொள்ளை சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

மலேசியா: வேலை தேடி சென்ற 12 வெளிநாட்டவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது .

இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவின் Sarawak மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. முதல் சம்பவத்தில் 3 குடியேறிகளும் இரண்டாவது சம்பவத்தில் 9 குடியேறிகளும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். “அவர்களை கைது ...

மேலும்..

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் - அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் - ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி  அமைச்சர்  ஜோன்ஸ்டன் ...

மேலும்..

பல ஜெஸின்டாக்கள் உருவாகினாலே அன்றி நாட்டை காப்பாற்ற முடியாது…

அதல பாதாளத்தை நோக்கி நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் நம் நாட்டை பல ஜெஸின்டாக்கள் உருவாகினாலே அன்றி மீட்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். ...

மேலும்..

கருணா அம்மன் கல்முனையில் தமிழ்- முஸ்லிம் உறவை சீரழிக்க முனைகிறார் : கோயில் வீதி காணி விவகாரத்தில் எத்தரப்பையும் பாதிக்காத தீர்வே அவசியம் – ச.ராஜன்.

யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவில் தொடரும் நடமாடும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்திலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருதிலும், கல்முனை ...

மேலும்..

வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு வைகோ பாராட்டு.

வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு வைகோ பாராட்டு மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில்தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் அர்ப்பணிப்புப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர்களே! வாழ்க்கைப் ...

மேலும்..

ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் அமையும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் அமையும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் கீழ் ...

மேலும்..

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல்.

புத்தாக்க அரங்க இயக்கம்  நடத்தும்  இணையவழி பன்னாட்டு  அரங்க கதையாடல் 01 நிகழ்வு   புரட்டாதி மாதம் 7,8,9,10 ஆம் திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் 7.9.2021 செவ்வாய்க்கிழமை பேராசிரியர் ...

மேலும்..

மற்றுமொரு பொருளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…

நாட்டில் ஒக்சிமீட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒன்சிமீட்டரின் விலை 3000 ரூபா என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியாகியுள்ளது. இலங்கை சந்தையில் அதிக விலையில் ஒக்சிமீட்டர் விற்பனை செய்யப்படுவதுடன் தரம் குறைந்த ஒக்சிமீட்டரும் சந்தையில் ...

மேலும்..

நாட்டில் சர்வாதிகார இராணுவ ஆட்சி – மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு…

நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்குமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்…

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளுடன் பயணித்த மீன்பிடி கப்பலொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கப்பலில் பயணித்த 7 பேரும் கடற்படையினரால் கைது ...

மேலும்..

யாழில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு…

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் ...

மேலும்..

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய, இதுவரை ...

மேலும்..