September 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்டக் கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு பரிந்துரைப்பற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் அது தொடர்பிலான உபகுழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக இதனை உள்ளடக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என யோசனை ...

மேலும்..

30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசியைப் பெறவும் – இராணுவத்தளபதி

30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் இதுவரையில் 1,05,44,229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பு வரைவு நவம்பரில் ஜனாதிபதியிடம்!

புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு வருகிற நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது. கோவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குழுவின் ...

மேலும்..

மக்கள் நீதிமன்றில் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் – சஜித்

கொரோனா  நோயினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நாடும்  சந்திக்காத  அளவு வீழ்ச்சியை இலங்கை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான தூரநோக்கற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் உயிரை ...

மேலும்..

கொக்குத் தொடுவாய், பூமடுகண்டலில் பெரும்பாண்மை இனத்தவர்களின் நில அபகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - கரைதுறைபபற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள பெரும்பாண்மை இனத்தவர்கள் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாண்மை இனத்தவர்களின் குறித்த அபகரிப்பு முயற்சியை 12.09.2021இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், ...

மேலும்..

இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை – திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி பேட்டி…

(க.கிஷாந்தன்) இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் இந்தியா தமிழகத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை. அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள்  நிறைவேறவில்லை. புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி. இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது. 30-வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.  மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில் புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்த்தியில் இருப்பதை காணமுடிகிறது. இலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதன் மூலம் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது, கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சினையாக இருந்தது. ராஜீவ்காந்தி கொலை செய்ததாகவும் இருந்ததால் அதன் அடிப்படையில் போராளிகள் இயக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு அதற்கான சட்ட திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர். புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம் என்றார். தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது, சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கையில் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. அதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 6மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும். கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் ஊடாக அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும்..

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக இத்தாலியில் இன்று ஆர்ப்பாட்டம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் பிரதமர் மஹிந்த பங்கேற்கின்ற நிகழ்வு இடம்பெறவுள்ள இத்தாலியின் பொலஞ்ஜா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நாளை மாலை 03 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கின்ற ...

மேலும்..

இலங்கையில் சீன தலையீடு குறித்து இந்தியாவில் ராதா எம்பி கருத்து.

இந்தியாவில் வாழும் இலங்கை மலையக தமிழர்கள் தாயகம் திரும்புவது வீணான செயல் என்று இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி: இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் திருச்சி வந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ...

மேலும்..

பதவி விலகப் போவதாக அரசாங்கத்தை மிரட்டும் கீதா குமாரசிங்க!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தான் பதவி விலகப் போவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டம் பெந்தர  தொகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் தன்னால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

DP Education இலங்கையில் உள்ள 4.2 மில்லியன் மாணவர்களில் 650,000 மாணவர்களை சென்றடைந்துள்ளது.

கொவிட் தொற்று நோயானது முழு உலகத்தின் கல்வி செயன்முறைகளை மாற்றிமைத்துள்ளது. இதன் விளைவாக  பாடசாலைக்கல்வி முறையானது வியத்தகு முறையில் மாற்றமடைந்துள்ளது. ஓர் தனித்துவமான இலத்திரனியல் எனும்   டிஜிட்டல்  தளத்தில் கற்பித்தலை தொலை இயக்கியாக கொண்டு (remote)  இது கால் பதித்துள்ளது. இதை ...

மேலும்..

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி , நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி , நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு  திறக்கப்படும்  - ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஒன்பது அல்லது பத்து மாதங்களுக்கு முன்பு மத்திய  அதிவேக நெடுஞ்சாலையை  எங்களால் நிறைவு ...

மேலும்..

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொதி அறிமுக நிகழ்வு !

நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையினால் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துபொதி வழங்கல் அறிமுக நிகழ்வும் சுவதாரணி  ஆயுர்வேத மருந்து வழங்கும் நிகழ்வும் புனித ...

மேலும்..

வெளியிறங்கிய நபர்கள் மீது சாய்ந்தமருதில் கொரோனா பரிசோதனை : தொடர் விமர்சனங்களை சந்திக்கும் சுகாதாரத்துறை !

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் அத்தியவசியத் தேவையின்றி வெளியிறங்கிய நபர்கள் மீது பாதுகாப்பு துறையினரும் சுகாதாரத்துறையினரும் பீ.சி.ஆர். நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமுலில் இருக்கும் போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வரும் ...

மேலும்..

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம்

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில் அரசியல் இடையூறுகள் வேண்டாம் தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் வேண்டுகோள் மாணவர்களுக்கு உரிய இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் என்ற உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதை வழங்குவதாகக் கூறி இருக்கும் தேசிய மொழிகள் கற்கை நிலையம் ...

மேலும்..

சுற்றிவளைப்பு நடவடிக்கை : காரைதீவு பிரதேச வீதிகளில் நடமாடிய மூவருக்கு தொற்று உறுதியானது ?

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில் மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் கொரோனா ...

மேலும்..

செங்கல் லொறி விபத்து: மதிலில் மோதி தடம்புரண்டது!

(வி.ரி.சகாதேவராஜா) நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பாரியசேதம் ஏற்பட்டது. இச்சம்பவம் காரைதீவு பிரதானவீதியில் நேற்று(11)சனிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. நயினாகாட்டிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு வந்தகொண்டிருக்கையில் காரைதீவு கந்தசுவாமி ஆலயமுன்ளாலுள்ள பிரதானவீதியில்வைத்து திடிரென டயர் வெடித்து இவ்விபத்து சம்பவித்துள்ளது. திடிரென டயர்வெடித்தகாரணத்தினால் வேகமாகவந்த ...

மேலும்..

திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள்.

திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள். அதனை பிரதி பண்ணும் எம்மவர்கள். ஆப்கான் விவகாரம் இதற்கு சான்று.     இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். இவ்வாறான மக்களை யூடியூப் சனல் மூலம் பணம் சம்பாதிக்கின்ற சில கும்பல்கள் ஊடகம் என்று ...

மேலும்..

கொரோனா காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அகதிகளும்…

கொரோனா பெருந்தொற்று சூழலினால் தொழில்நுட்பம் சார்ந்து இயங்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் அதற்கான திறன்களும் ஆஸ்திரேலியாவில் குடியமரக்கூடிய அகதிகளுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. சமீபத்தில் Foundations for Belonging 2021 என்ற தலைப்பின் கீழ் Settlement Services International மற்றும் ...

மேலும்..