September 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரிசி வகைகளுக்கான புதிய விலை?

அரிசி வகைகளுக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ...

மேலும்..

மோட்டார் வாகனத்துடன் கோர விபத்து…

28/09/2021 நேற்று பிற்பகல் வேளையில் கிரான்குளம் பிரதான விதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் வண்டியுடன் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் வாகனம் (கார்) தனது கட்டுப்பாட்டினை இழந்து மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த நபருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வண்டியில் பயணித்த இளைஞ்ஞன் உயிரிழந்தமை ...

மேலும்..

தியாகத தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு உணவுக் கொடை…

தியாகத தீபம் திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்க் குடிமை செயலகம் (Tamil Canadian Center for Civic Action) நடத்திய உணவு வங்கிகளுக்கான உணவுக் கொடைத் திட்டத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனை 3050 ...

மேலும்..

கரங்கா வட்டை விவகாரம் : எம்.பிக்களின் பங்குபற்றலுடன் நடந்த உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்வு கிட்டியது!

அம்பாறை சம்மாந்துறை கரங்கா வட்டை விவகாரம் சம்பந்தமாக அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அம்பாறை அரசாங்க அதிபர் பண்டாரநாயக்கா தலைமையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கரங்கா வட்டையில் விவசாயிகள் விவசாயம் செய்வதில் தடையாக இருந்து ஒரு குழுவினர் அத்துமீறி செயற்பட்டதை  தடுத்து நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம்பெற்ற ...

மேலும்..

சொறிக்கல்முனை பிரதேசத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள்…

(எம்.எம்.ஜபீர்) சொறிக்கல்முனை பிரதேசத்தில் இன்று  நள்ளிரவு உட்புகுந்த காட்டு யானைகள் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலை மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளன. ஊருக்குள் உட்புகுந்த யானை அரிசி ஆலையை உடைந்து நெல் மூடைகள் சேதப்படுத்தியுடன், மதில்கள்,  நெற்களஞ்சியங்கள், வாழை மரங்கள், பயிர்கள், வேலிகள் உள்ளிட்ட உடைமைகளையும் ...

மேலும்..

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே கௌரவ பிரதமருடன் சந்திப்பு…

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இன்று (28) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். சேவையை பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் கௌரவ ...

மேலும்..

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ‘சுவ தரணி’ மருந்துப் பொதி கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு.

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான 'சுவ தரணி' சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. சுதேச வைத்திய ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி…

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதற் கட்டமாக நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட ...

மேலும்..

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ...

மேலும்..

செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக கடனுதவி தொகை வழங்கி வைப்பு.

( எம். என்.  எம் . அப்ராஸ்) செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி   திணைக்களத்தினால் சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது இதற்கமைய கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக செளபாக்கிய வார  தேசிய வேலைத் திட்டத்தின்  கீழ்  தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடனுதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனைக்குடி சமுர்த்தி வங்கிகாரியாலயத்தில் வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் இன்று  (28)இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர்  எ. ஆர். எம். சாலிஹ் கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா   மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம். ஐ. எம். முஜீப் , சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களான எம். டி . அமினுத்தீன், எம். எஸ். ரிபாயா, எஸ். தாயனந்தி , எம். எல். மர்ழியா ஆகியோர் இணைந்து குறித்த பயனாளிகளுக்கான  கடனுதவி தொகை யினை வழங்கி வைத்தனர். செளபாக்கிய தேசிய வாரம் இம்மாதம் 23 ம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரஅனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் -த.கலையரசன் .

அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் தவராசாகலையரசன் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்... எமது நாட்டை பொறுத்தவரையில் தமிழ் சமூகம் நீண்டகாலமாக தீர்வுகாண முடியாதவர்களாகவே இருந்துகொண்டு இருக்கின்றோம். ...

மேலும்..

ஊடகவியலாளர்களை அச்சறுத்தி அரசியல் நடத்த முடியாது… மட்டக்களப்பாரை மடையர்கள் என நினைக்கின்றது பொதுஜன பெரமுன… (தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் – என்.சுந்தரேசன்)

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அவர்கள் அநுராதபுரம் சிறைசச்சாலையில் செய்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது குழு அமைத்து விசாரிக்க வேண்டிய விடயம் அல்ல நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய விடயம். இது தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளருக்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானை விட கீழ்த்தரமான நிலையில் இருக்கின்றோம்… (தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் – என்.சுந்தரேசன்)

இன்றைய பொருளாதார நிலை மிகவும் பாரதூரமாக இருக்கின்றது. சிம்பாவேயின் நிலைக்கு ஒத்த நிலையாக வந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய இந்த நாட்டின் நிலைமைக்குக் காரணம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து தெரிவு செய்த மக்களேயன்றி வேறு யாரும் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடைநிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் – நாளை விசாரணை!

வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் ...

மேலும்..

மஜீத்புரம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடக்கும் அவலம் : வக்பு சபை, கலாச்சார திணைக்களம் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை !

அம்பாறை வட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத்புரம் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்தும் நிர்வாக முறைகேடுகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். திருமண அனுமதிக்கடிதம் வழங்குவது முதல் பல்வேறு முறைகளிலும் இவர்களின் அதிகாரத் துஷ்ப்பிரயோகமும், நிர்வாக முறைகேடுகளும் இடம்பெற்று வருகின்றது. கடந்த ...

மேலும்..

காரைதீவில் வீடு சேதமடைத்தோருக்கு நிவாரணமளிப்பு !

அனர்த்த நிவாரண சேவை அமைச்சினால் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக கடந்த ஜூன், ஜூலை  மாதம்களில் வீடு சேதமடைந்த பத்து பயனாளிகளுக்கான ரூபாய் 10000 முதற்கட்ட காசோலை காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் ...

மேலும்..

மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 28.09.2021 அன்று ஆர்பாட்டத்தில் குதித்தனர். மஸ்கெலியா டீசைட் தோட்ட  தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட ...

மேலும்..