October 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காந்தி இல்லம் நியூசிலாந்து தமிழ் நிதியத்தினால் ஒட்டுசுட்டானில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட கனகரத்தினபுரம்,பேராறு ஆகிய கிராமங்களில் கொவிட் பரவரல் காரணமாக அன்றாட வருமானத்தினை இழந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு, தலா 1550 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், காந்தி இல்லம் நியூசிலாந்து ...

மேலும்..

திருமலையில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

திருமலை மாவட்டத்தில் 300 இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணங்கள் செலுத்திய பற்றுச்சீட்டுகளும் இணைப்பினைப் பெறுவதற்கான ஆவணங்களும் பயனாளிகளுக்குக்  கையளிக்கும் நிகழ்வுகள் புல்மோட்டை, இறக்கக்கண்டி, மூதூர், தோப்பூர், ஈச்சலம்பற்று ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன. ஜனநாயக ...

மேலும்..

வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 47இல், 54பயனாளிகள் உள்ளீர்ப்பு.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் நாற்பத்தேழாங் கட்டமானது 02.10.2021இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இச்செயற்றிட்டத்தின் நாற்பத்தேழாவது கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட  தீர்த்தக்கரை, சிலாவத்தை, நாயாறு ஆகிய பகுதிகளிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட ஐம்பத்துநான்கு குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகள் ...

மேலும்..

அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

அரசியற் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரின் வருகை தொடர்பான விடயத்திற்கே தலைமையிடம் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை என்றால். இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதனைப் பேசிப் பெற்றுத் தரப் போகின்றார்கள். அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் ...

மேலும்..

வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான நீதி விசாரணைக்கு யார் பொறுப்பு? தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதற்காக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை காணாமல் போனவர்கள் என்று சொல்வதும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ், ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் சூழ்ச்சிகள் இன்னும் ஓயவில்லை. -நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி

அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக அரங்கேற்றப்படும் இன, மத  குரோதச் செயற்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி ...

மேலும்..

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ சபை செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு !

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ சபை முன்னெடுக்கும் கொவிட்-19 நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எச்.சீ.எம்.லாபீர் தலைமையில் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ...

மேலும்..

சிறுவர் தினத்தை முன்னிட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால்துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு.

2021.10.01  சிறுவர் தினத்தை முன்னிட்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 07 பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் அட்டப்பளம் ,வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்கிய ...

மேலும்..

நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

நவெம்பர் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே அரசாங்கம் நோக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார். மேலும் புதிய சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த ...

மேலும்..

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தந்துள்ள நற்செய்தி.

இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்துள்ளது.வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவுடன் நேற்று (01) நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு ...

மேலும்..

நாட்டில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் மீண்டும் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் உயர்த்த வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் சமையல் தெரிவித்துள்ளது. இந்த விடயம் லிட்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் அடங்கிய குறித்த ...

மேலும்..

ஓய்வூதியம் வழங்க கூட அரசிடம் பணம் இல்லை ரணில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசின் ...

மேலும்..

யாழ் அச்சுவேலி பகுதியில் வன்முறைக்குழு ஒன்றின் ஆயுதங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியானது இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தப்பித்துச் ...

மேலும்..

இலங்கையில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று பெய்து வரும் கடும் மழைக்காரணமாக, சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை, இரத்தினபுரி, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ...

மேலும்..

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார். 20 ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு : 79,804 பேர் கைது?

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 79,804 பேர் ...

மேலும்..

விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை.

நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆண்டுதோறும் 28 ...

மேலும்..