October 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ கணேசன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்." - என்று  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் ...

மேலும்..

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு சாணக்கியன் வேண்டுகோள்

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு  சாணக்கியன் வேண்டுகோள் வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களினால் முன்னெடுக்கப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதேசரீதியாக  மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன்தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை நகரில் ...

மேலும்..

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின், சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தினூடாக பயிற்சி நெறிகள் விஜயதசமியில் ஆரம்பம்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின், சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தினூடாக வழங்கும் பயிற்சி நெறிகள் விஜயதசமி தினமாகிய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 15.10.2021 காரைதீவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த ...

மேலும்..

போரில் உயிரிழந்த மாணவர்கள் நினைவாக இரத்ததான முகாம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் ஒழுங்குபடுத்தலில்  குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 8 வது வருடமாக  ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் போராட்டம்

(க.கிஷாந்தன்) பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (16) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன, பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கை

( எம். என்.  எம். அப்ராஸ்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவிக்குட்பட்ட கல்முனை  பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும்முகமாக கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி   பிரிவினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள்இன்று (16) முன்னெடுக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில்  , கல்முனை தெற்கு சுகாதார பிரிவின்  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஏ. எம். பாறுக் அவர்களின்நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர திண்ம கழிவகற்றல் பிரிவு மற்றும் , கல்முனை ப்ரிலியண்ட்விளையாட்டுகழகத்தினரின் ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம். நியாஸ் , எம்.ஜீனைடீன் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு கள உதவியாளர்கள் , பல நோக்கு செயலணியினர் ஆகியோர்  இணைந்து கல்முனை  மதரஸா வீதி  தொடக்கம் காசிம் வீதி வரையுள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கல்முனை  பிரதேசத்தின் குறித்த பகுதிகளில் சுற்றுச் சூழலில் வீசப்பட்டு, காணப்படுகின்ற ,  டயர்கள் , டின்கள் பொலித்தீன் பைகள், யோகட் கப் மற்றும் சிரட்டைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்ட கொள்கலன்கள்மற்றும் கழிவுகள் யாவும்  கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களில் சேகரித்துஅகற்றல்  நவடிக்கை இடம்பெற்றதுடன், பராமரிப்பின்றிக் கிடக்கும் வெற்றுக்காணிகள், கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளிட்ட டெங்குநுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு   கடுமையானஎச்சரிக்கை  விடுக்கப்பட்டதுடன்  ,விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்  சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. பொது மக்கள் சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில்  தொடர்ச்சியாக  டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக டெங்கு நுளம்புஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.இதற்கு பொது மக்கள்  தங்களின் ஒத்துழைப்பை பூரணமாகவழங்குவது அவசியமாகும் அத்துடன் நுளம்புகள் பெருகும் இடங்கள் காணப்படும் பட்சத்தில்  மீறுவோர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர். எம். அஸ்மி இதன் போது தெரிவித்தார். ...

மேலும்..

மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற, நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி விழாவின் போது.

விஜயதசமி புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியின் தசமி நாளன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரின்படி இந்த ஆண்டு அக்டோபர் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. நவரத்திரி விழா அக்டோபர் 7ம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ஆம் திகதி நேற்று ...

மேலும்..

நானுஓயா பொலிஸ் பிரிவில் கார் முச்சக்கர வண்டி விபத்து ஒருவர் காயம்

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவில் 15.10.2021 அன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் காரும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி ...

மேலும்..

சேவை காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு

தமது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள்  (15) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர். செக் குடியரசின் தூதுவர் மிலான் ஹொவர்க் மற்றும் எகிப்பு தூதுவர் ஹுசேன் எல் ...

மேலும்..

வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) வட்டவளை பொலிஸ் பிரிவில் கரோலினா பகுதியில் 15.10.2021 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் வழுக்கி விபத்துக்குள்ளானதில் அதனை செலுத்திய ...

மேலும்..

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும்

ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள பௌத்த ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா ராணுவம் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கடந்த 13.10.2021 அன்று, இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக ...

மேலும்..

இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை

இராமச்சந்திர ஆதித்தன் நினைவு நாள்! வைகோ மாலை அணிவித்து மரியாதை மாலைமுரசு அதிபராக இருந்த இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமது கலிங்கப்பட்டியில் உள்ள இல்லத்தில் இராமச்சந்திர ஆதித்தனாரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துரை வைகோ, ...

மேலும்..

முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்

சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை  தனியான இனம் என  இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை    எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ...

மேலும்..

அடிப்படைவசதிகளற்ற கிராமத்தை நோக்கி நகர்ந்த மாஹீரின் மக்கள் பணி : அறபா நகரில் கல்விக்கான விதை போடப்பட்டது.

இறக்காமம், குடிவில் பிரதேச அறபா நகரில் சுமார் 33 குடும்பங்கள் எந்தவித அடிப்படைத் வசதிகளுமின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த பிரதேசத்தில் பாலர் பாடசாலை ஒன்றின் தேவை நீண்டகாலமாக உணரப்பட்டிருந்த நிலையில், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி விஷேடமாக கணியம் அதேபோன்று மீன் வளர்ப்பு இறால் வளர்ப்பு சம்பந்தமான விடயங்களுக்கு ...

மேலும்..

இடர்வரு நிலையிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலைக்குள் கல்விக்கான வள இருப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு !

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக தரம் 06 முதல் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களைத் தாபித்தல் மற்றும் வலுவூட்டுதல் - 2021 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் இடர்வரு நிலையிலுள்ள ...

மேலும்..