October 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல- ரெலோ கண்டனம்

மக்களின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்க முற்படுகிறது அரசு . தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மாற்றீடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது என்று அரசாங்கம் அறிவித்திருப்பது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்கின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு ...

மேலும்..

இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் வியட்நாம் தூதுவர் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை தெரிவிப்பு

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் இன்று (20) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தூதுவர் ...

மேலும்..

கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ பிரதமருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை இன்று (20) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ...

மேலும்..

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் கெளரவ நரேந்திர மோடி அவர்கள் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார்.

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் கெளரவ நரேந்திர மோடி அவர்கள் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது  ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் ...

மேலும்..

மிலேனியம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச  சபை உறுப்பினர் எம்.பி. நவாஸின் சொந்தநிதியிருந்து  06ஆம் கிராமம் மிலேனியம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது. சாளம்பைக்கேணி - 02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் யு.எல்.தெளபீக் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

215ஆவது ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்பு.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 215ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்து ...

மேலும்..

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில்.. கண்டி நகரத்தையும் அதனை அண்டிய வீதி வலையமைப்பையும்  அபிவிருத்தி  செய்து  பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலற்ற    நகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நெடுஞ்சாலை அமைச்சு ...

மேலும்..

கௌரவ பிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தேசிய மீலாதுன் ...

மேலும்..

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ...

மேலும்..

மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்

தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  இன்று 20.10.2021 புதன்கிழமை காலை, சென்னை, தலைமை ...

மேலும்..

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தினால் பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு.

மாவடிப்பள்ளி- மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தினால் "கல்விக்கும் கரம் கொடுப்போம்" எனும் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களை நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்யும் முதலாம் கட்ட  நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) கழகத்தின் தலைவர் ஏ.ஜே.எம். அஷ்ரப் ...

மேலும்..

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக அரங்கம்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் 6 நூல்களின் அறிமுக விழா 22-10-2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்வில் திரு.நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், தோழர் இரா.உமா  கருத்துரை ஆற்ற உள்ளனர்.

மேலும்..

அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட் அறிமுக நிகழ்வு

அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட் அறிமுக நிகழ்வு இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம். ஸமீலுல் இலாஹியின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்ஷார்  பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

சேவை செய்வதில் ஏ.எல்.எம். அதாஉல்லா கட்சி வாதங்களுக்கு அப்பாற்பட்டவர் அக்கரைப்பற்று தவிசாளர் றாசிக் புகழாரம். !

சேவை செய்வதில் ஏ.எல்.எம். அதாஉல்லா கட்சி வாதங்களுக்கு அப்பாற்பட்டவர் - வீதி அபிவிருத்திகளுக்கான  அடிக்கல் நடுவிழாவில் அக்கரைப்பற்று தவிசாளர் றாசிக் புகழாரம் ! நீண்ட காலமாக மக்களின் தேவையாக காணப்பட்டு வந்த வீதிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்த தேசிய காங்கிரஸின் தலைமை ...

மேலும்..

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் தடம்புரள கூடாது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் தமிழ் தேசியம் ஒருபோதும் தடம்புரள கூடாது இதுதான் யதார்த்தம். 1983 இற்கு முதல் அகிம்சை வழி சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் தேசியம் ஆயுதம் தூக்காத போராட்டமாக இருந்திருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ...

மேலும்..

கல்முனை நல்லிணக்க இளைஞர்கள் மன்றம் அங்குராப்பபணம் !

(எம்.என்.எம்.அப்ராஸ் ) சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) அனுசரணையில் கல்முனை பிரதேச நல்லிணக்க இளைஞர்கள் மன்றம் அங்குராப்பண ஒன்றுகூடல் நிகழ்வுஅம்பாறை மாவட்ட மற்றும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின்  இனைப்பாளர்  எஸ்.எல்.ஏ.அஸீஸ்தலைமையில் (17)கல்முனையில்  நடைபெற்றது. குறித்த ஒன்றுகூடலானது   பிரதேச இளைஞர் மன்றத்தின்  அறிமுகம் மற்றும் எதிர்கால நடவடிக்கை  தொடர்பிலும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்  பற்றியும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்கமுன்னெடுப்புக்கள் தொடர்பில் நல்லிணக்கமன்றத்தின் முக்கிஸ்தகர்களால் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில்கருத்துரைக்கப்பட்டது.  மேலும் இதன் போது  கல்முனை நல்லிணக்க இளைஞர் மன்ற இணைப்பாளராக எம். வை.  எம். வை. இம்ரான்மற்றும் செயலாளராக எம். எஸ் ரக்சானா ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) இணைப்பாளர் டி.இரஜந்திரன் , சமாதான சமுகபணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.மாஜீத், இளைஞர்கள் ,யுவதிகள்  ஆகியோர்   என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தீபச்சுடர் ஏற்றி ...

மேலும்..

வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச டெப் வழங்கி வைக்கும் நிகழ்வு…

கொவிட் 19தொற்று நோய்க் காலங்களின் போது செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களின் சமத்துவமானதும், தரமானதுமான தொலைதூரக்கல்விக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு YMCA நிறுவனத்தின் ஊடாக இயங்கி வரும் வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களுக்கான வீட்டுமுறைக்கற்றலை மேம்படுத்தும் வகையில் இலவச டெப் வழங்கி வைக்கும் ...

மேலும்..