November 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில் சிறப்புற இடம்பெற்ற தீபாவளிப் பண்டிகை நிகழ்வு.

நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து ...

மேலும்..

பொது இடங்களில் கொவிட் அட்டை அவசியம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கும் விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும், கனடா தூதுவர் டேவிட் மெகினனிற்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த ...

மேலும்..

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுமாறு கோரி வங்கி ஊழியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு…

(சுமன்) அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் கைச்சாத்திடுமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை, வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கி அரச வங்கிகளின் ஊழியர்களது ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் அரச வங்கிகளின் கூட்டு ...

மேலும்..

மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் பா.உ. சுமந்திரன் சந்திப்பு…

(சுமன்) வலி. வடக்குப் பிரதேச மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் அப்பிரதேசத்தில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய நிலப்பரப்புக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இக் கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் மீள் குடியேற்ற ...

மேலும்..

நாளாந்தம் 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்.

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு - மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் ...

மேலும்..

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை 4000 ரூபாவாக அதிகரிக்க முடிவு ?

12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை 4000 ரூபா வரை அதிகரிப்பதே லாஃப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தின் நோக்கம் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் ...

மேலும்..

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் களிகம்பு நிகழ்வு…

கல்முனைப் பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி கடற்கரை மைதானத்தில் களிகம்பு பயிற்சியும் அரங்கேற்றமும் இன்று (05)சிறப்பாக நடைபெற்றது. "தெலஸ் மகோ பகன"  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும்,மாவட்ட செயலகமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வுக்கு ...

மேலும்..

தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது !

தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது ! நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட இளைஞர் கழகங்களின் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கபடி சுற்றுப்போட்டி திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. ...

மேலும்..

கிழக்கின் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர் வினாசித்தம்பி ஜெயராஜா காலமானார்…

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியரும் சமூக சேவையாளருமான கீர்த்திஸ்ரீ தேசபந்து வைத்தியபீமானி பெரியதம்பி வினாசித்தம்பி ஜெயராஜா அவர்கள் தனது 80வயதில் நேற்றைய காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓய்வுபெற்ற அதிபராகவும், ஆயுர்வேத வைத்தியத் துறையில் தனக்கென ...

மேலும்..

பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை – வட்டவளையில் சம்பவம்…..

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அயல் குடும்பத்திற்கு, ...

மேலும்..

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி ! முஸ்லிம் சமுகம் அச்சத்தில் : ம.கா. அமைப்பாளர் சித்தீக் நதீர் கண்டணம்.

ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி, ஞானசார தேரர்  தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் சமுகத்தை பெரும் அச்சமான சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  நாவிதன்வெளி அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதீர் குற்றம் சுமத்தியுள்ளார். முஸ்லிம் சமுகம் - ...

மேலும்..

உபவேந்தர் பேராசிரியர் றமீஸுக்கும் அவரது தாய்க்கும் கல்விசாரா ஊழியர்களின் கௌரவம்..

அண்மையில் தெரிவான தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரையும் அவரது தாயாரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2021.11.04 ஆம் திகதி மாளிகைக்காடு ‘பாவா றோயல் ‘ வரவேற்பு மண்டபத்தில், நிகழ்வின் தலைவர் சி.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது. உயர் கல்வியாளர்களை உற்பத்தி செய்யும் உயர் நிறுவனங்களில் ஒன்றான  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக அண்மையில் ...

மேலும்..

கடலரிப்பு காரணமாக பாண்டிருப்பில் மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு  ஏற்பட்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள  மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில்  மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி ...

மேலும்..

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுமாறு கோரி வங்கி ஊழியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு…

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் கைச்சாத்திடுமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை, வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கி அரச வங்கிகளின் ஊழியர்களது ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகள் இவ்வருடம் கைச்சாத்திடப்பட வேண்டியது. ஆனால் நிதி அமைச்சினால் பதினொரு மாதங்களாகியும் இன்னும் ...

மேலும்..

9ம் திகதி தேசிய எதிர்ப்பு தினமன்று, தோட்ட தொழிலாளரும் பகலுணவு வேளை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்

தமுகூ தலைவர் மனோ எம்பி எதிர்வரும் 9ம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என ...

மேலும்..