November 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். இருபாலை மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிப்பு !!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன  மழையின் காரணமாக இருபாலை தெற்கு கிழக்கு வீடுகள் மற்றும் பெரும் பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. இருபாலை தெற்கு புதிய செம்மணி வீதி, கட்டப்பிராய் வீதி, கலைமணி வீதி, ஆனந்தபுரம் வீதி மற்றும் வேளாதோப்பு வீதி ...

மேலும்..

புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என நம்புகிறோம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 160 பத்திக் மற்றும் உள்ளூர் ஆடை தொழிற்சாலை ...

மேலும்..

மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (09.11.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டகலை நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன்,  பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய ...

மேலும்..

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட  பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் கனமழையால், பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. செம்பரம்பாக்கம், ...

மேலும்..

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. அந்தவகையில் விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் நேற்று ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் நியமனம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் தேசிய செயற்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ...

மேலும்..

கேகாலையில் வீட்டின் மீது மண்மேடு சரிவு – மூவர் பலி

கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்..

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகளுக்கு, குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகளுக்கு, குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சம்பா நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளில் பெரும்பாலோனோர், தங்களது நகைகளை ...

மேலும்..

ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு கட்சியின் பொருளாளர் கலீலுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டமைக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கும் தொடர்பில்லை – தலைவர் மிப்ளால் தெரிவிப்பு !

"ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியின் பொருளாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானின் நியமனம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிபாரிசில் இடம்பெற்ற ஒன்றல்ல. இவரின் நியமனத்தின் பின்னணியில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தூண்டுதல்கள் எதுவுமில்லை. ...

மேலும்..