November 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள இரு சபைகளின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்…

(சுமன்) மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற சபை அமர்வின் போது பாதீட்டு அறிக்கை ...

மேலும்..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கலாநிதி சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு தொடர்ந்தும் திறப்பு

(க.கிஷாந்தன்) மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து ...

மேலும்..

கம்பளை அட்டபாகை பகுதியில் 2 மாடிவர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதம்

(க.கிஷாந்தன்) கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் ...

மேலும்..

பதவி நிலை உத்தியோகத்தர் பற்றாக்குறைவினால் பணிகள் மந்தம்;

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காரணமாக வேலைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்கிழக்கு கல்விப் பேரவை, இது குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் உடனடியாக அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

மேலும்..

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் குடிநீர் வசதி.

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கிணறுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்கள் சிலரின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையேற்று, ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி ...

மேலும்..

பஸ் – கனரக லொறி விபத்து – ஒருவர் பலி – இருவர் காயம்

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் 11.10.2021 காலை 7 மணியளவில் இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ...

மேலும்..

தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளர்களுக்கான உளவியல் உளவளத்துணை பயிற்சி வழங்கும் நிகழ்வுகள் !

காரைதீவு பிரதேச செயலக நிர்வாக பிரதேசங்களிலிருந்து செளபாக்கியா வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளர்களுக்கான உளவியல் உளவளத்துணை பயிற்சி வழங்கும் நிகழ்வுகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சமுர்த்தி வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ...

மேலும்..

ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் “சுரகிமு கங்கா” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் கள விஜயமும் !

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழான ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா" வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வும் கள விஜயமும் இறக்காமம் - 07 ஆம் கிராம சேவகர் பிரிவு ஆஷ்பத்திரிச் ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வு.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் புதன்கிழமை அதாவது 10.11.2021 மாலை 3.20 மணி தொடக்கம் 6.00மணிவரை இடம்பெற்றது. இந்நிகழ்வானது ...

மேலும்..

இரட்டைபிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தபால் மூலமாகவேணும்வாக்களிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு ...

மேலும்..

நாட்டுமக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கமுள்ள “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் வேண்டுகோள்.

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை ...

மேலும்..

சீரற்ற காலநிலை – மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்

(க.கிஷாந்தன்) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. அந்தவகையில், மத்திய மாகாணத்திலும் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மையப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தோட்ட வீடமைப்பு ...

மேலும்..

புளியந்தீவு ஆனைப்பந்தி ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்ற சூரன்போர்…

மட்டக்களப்பில் சிறப்புப் பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சிறப்பம்சமான சூரனை வதம் செய்யும் சூரன்போர் காட்சி வெகு சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது. இந்துக்களின் விரத வழிபாடுகளில் முருகனுக்குரிய விரதமாகிய கந்தசஷ்டி ...

மேலும்..

என்னுடைய செயல்களுக்கு அரசியல்சாயம் பூச முற்படுகின்றார்கள்… (மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் – எம்.தயாபரன்)

அவர்களுடைய அரசியலைச் செய்வதற்கு நான் நிருவாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதற்காக எனது செயற்பாடுகளுக்கு அரசியற் சாயத்தைப் பூசி பிழையாக வழிநடத்த முற்படுகின்றார்கள். மாநகரசபைக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய செயற்பட முடியுமே தவிர முதல்வரின் அறிவுறுத்தல்படி செயற்பட முடியாது என மாநகர ...

மேலும்..