November 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண்அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்-பிரதேச சபை உறுப்பினர்

திருகோணமலை  புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண்அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச  பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புடவைக்கட்டு கிராமம் 1950ம்ஆண்டு  முன்னோர்களால் குடியேறி உருவாக்கப்பட்ட72 வருட வரலாற்றைக்கொண்ட ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும்.இங்கு தற்போது முஸ்லிம்கள்,இந்துக்கள்,சிங்களவர்கள் என 450 ...

மேலும்..

திடீரென மருதமுனைக்கு களவிஜயம் மேற்கொண்ட அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டவ்ளியூ. டீ. வீரசிங்க : பிரதேச குறைநிறைகளையும் ஆராய்ந்தார் !

மிக நீண்டகாலமாக பாவிப்பதில் பல்வேறு சிக்கல்களை கொண்டுள்ள மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் மருதமுனை வீட்டுத்திட்ட ஆற்று ஓடைகள் என்பவற்றின் நிலைகளறிந்து அவற்றுக்கான நிரந்தர தீர்வை பெறுதல் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய கள விஜயம் ...

மேலும்..

இனவாதமில்லாமல், பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன் : சாய்ந்தமருதில் வைத்து மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் வீரசிங்க அறிவிப்பு.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு என்னால் முடியுமான உதவிகளை செய்ய எப்போதும் தயாராக உள்ளேன். எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியை கொண்டு அம்பாறை மாவட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிறைய ஒதுக்கீடுகளை செய்துள்ளேன். அந்த வகையில் சாய்ந்தமருது பொலிவேரியன் மைதான அபிவிருத்திக்கும் 5 ...

மேலும்..

எமதுமக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுகந்திரம் இல்லை – சாணக்கியன் சாடல்!

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ...

மேலும்..

நுவரெலியாவில் ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் பலி.

க.கிஷாந்தன்) நுவரெலியாவில் சுற்றுலா விடுதி ஒன்றில் ஊழியர்கள் தங்கியிருந்த ஐந்தாவது மாடி அறையில் இருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 29.11.2021 அன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த (47 வயது) ...

மேலும்..

அதிகரித்த விலைவாசிக்கும், தொழிற்துறை பாதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

க.கிஷாந்தன்) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் 29.11.2021 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் விடுப்பதற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் நடவடிக்கை.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்  கொடியேற்று விழாவினை  வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல்  விடுக்குமாறு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர்  கல்முனை பிரதேச செயலாளர்  ஜே.லியாகத் அலியை  சந்தித்து வேண்டுகோள் விடுத்ததுடன் இது தொடர்பான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வும் ...

மேலும்..

அட்டனில் வெடிப்பு சம்பவம் – பொருட்கள் சேதம்

க.கிஷாந்தன்) அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அட்டன் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29.11.2021) சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் ...

மேலும்..

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்!முல்லைத்தீவில் கண்டண போராட்டம்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக ...

மேலும்..

அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

க.கிஷாந்தன்) அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் 'மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார் குறித்த அமைப்பு கடந்த 30 ஆம் திகதி உதயமானாலும் அதன் ...

மேலும்..

மயக்கமா கலக்கமா…

வெடிக்குமா எரிக்குமா நடுக்கமா இருக்கும்மா சிலிண்டரே வாணாம்மா சிலிண்டர் என்றால் சீக்கிரம் சமையல் முடியும் என்றார் முந்தி எடுத்தார் சிலிண்டர் என்றால் சீக்கிரம் சமையல் முடியும் என்றார் முந்தி எடுத்தார் எடுத்த சிலிண்டர் வெடிக்கும் போது அடுத்த தெரிவு அடுப்பில் விறகு அடுத்த தெரிவு அடுப்பில் விறகு கட்டின் கீழே கவனம் வெடிக்கும் வெளியே வைப்பாய் வயரால் இணைப்பாய் ஏழை வயிறும் சிலிண்டரும் ஒன்று Empty ஆக இருக்கும் இரண்டும் ஏழை வயிறும் சிலிண்டரும் ஒன்று Empty ஆக இருக்கும் இரண்டும் அடுப்பு ...

மேலும்..

ரஹ்மத் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு.

கல்முனை யூத் விளையாட்டுக் கழகத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் பவுண்டேஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளிடம் ...

மேலும்..