December 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது.

அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ப்ரோபைன் என்றழைக்கப்படும் இரசாயன வாயுவின் அளவு அதிகரித்தமையே ...

மேலும்..

போலி நாணயத் தாள்களின் அபாயம்…

பண்டிகைக் காலங்களில் 1000 மற்றும் 5000 ரூபாய் போலி நாணயத் தாள்களை புழக்கத்தில் விடக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலும், இந்த பண்டிகைக் காலத்தில் ...

மேலும்..

ஐஸ் போதைப்பொருளை சொகுசு காரில் வைத்திருந்தவர் கல்முனை அதிரடிப்படையினரால் கைது.

சொகுசு காரில்  13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதானார். இன்று (21) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ...

மேலும்..

வவுணதீவில் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக  “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு  பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை கிராமத்திற்கான வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது பல வருட ...

மேலும்..

எரிபொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பு.

(க.கிஷாந்தன்) மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்  பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாம் விரக்தியடைந்துள்ளதாக ...

மேலும்..

ஜனாஸா நல்லடக்க ஏற்பாடுகளுக்கு ரஹ்மத் பவுண்டேஷன் உதவி.

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்முனை கிளுகிளுப்புச் சங்கத்திற்கு ஜனாஸாக்களை குளிப்பாட்டும் கட்டில் மற்றும் கபன் துணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ...

மேலும்..

33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் நிந்தவூர் கபடி அணி வீரர்கள் சாம்பியனாக தெரிவு !

( எம். என். எம். அப்ராஸ் ) 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்  கபடி போட்டியில் தேசிய மட்ட சம்பியனாக அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா இளைஞர்கழக கபடி அணி வீரர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வெற்றி மூலம்  தேசிய ரீதியில் அம்பாறை மாவட்டத்திற்க்கும் நிந்தவூர் பிரதேசத்துக்கு பெருமைசேர்த்துள்ளனர் . கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் கடந்த திங்கள்கிழமை (20)  நடைபெற்ற கபடிபோட்டியில் வெற்றி பெற்று  சாம்பியனாக முடி சூடிக் கொண்டனர் . இப்போட்டியில் பங்கு பற்றி தேசிய சம்பியனாக வெற்றியிட்டிய  நிந்தவூர்  மதீனா இளைஞர் கழக கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம்,  சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் இதன் போதுவழங்கி வைக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் சிறந்த ஆட்ட வீரராக (BEST PLAYER) நிந்தவூர் மதினா இளைஞர் கழகத்தின் கபடிவீரரும் ,தேசிய கனிஷ்ட கபடி அணி வீரருமாகிய  எஸ். எம் . சபிஹான் தெரிவு செய்யப்பட்டதுடன் குழு நிலை போட்டிகளில் இவர் சிறந்த வீரருக்கான விருது பெறும் முதலாவது  சந்தர்ப்பம்இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது . குறித்த விளையாட்டு கழக  கபடி அணி வீரர்கள் அண்மையில் இடம்பெற்ற அம்பாறை  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தினால் இடம்பெற்ற  விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடம்பெறறிருந்து தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் குறித்த தேசிய கபடி போட்டியில்சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது மேலும் இவ் வெற்றியை பெறுவதற்கு முழு மூச்சாக  அணியை வழி நடாத்தி உதவி புரிந்த அனைவருக்கும்  நிந்தவூர் மதினா இளைஞர் விளையாட்டு கழகத்தினர் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் .

மேலும்..

புதுவருடம் மற்றும் நத்தார் பருவ கால பொருள் கொள்வனவிற்கென விசேட விலைக்கழிவு பவுச்சர்கள் அறிமுகம்.

புதுவருடம் மற்றும் நத்தார் பருவ கால பொருட்களை இலகுவாக பெறுவதற்கு விசேட விலைக்கழிவுடனான பவுச்சர்களை வழங்கவுள்ளதாக நிந்தவூர் காகில்ஸ் சுப்பர் மார்க்கட் கிளையின் முகாமையாளர் என்.காண்டீபன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் தபால் காரியாலய ...

மேலும்..

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு – மக்கள் சிரமம்

(க.கிஷாந்தன்) மலையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு கிடைப்பதில்லை ...

மேலும்..

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு – மக்கள் அவதி

(க.கிஷாந்தன்) வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர். தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாததால் வைத்தியசாலைக்கும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் ...

மேலும்..

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் தொற்றா நோய் மருத்துவ விழிப்புணர்வு.

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (G.M.M.S) 35 வயதிற்கு மேற்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச வையத்திய குழாத்தினரால் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும் பரிசோதனையும் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸின் அழைப்பின்பேரில், அவ் வைத்தியசாலையின் வைத்திய ...

மேலும்..

கலவை மாற்றமே காஸ் சிலிண்டர் வெடிப்புக்கு பிரதான காரணம்-ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தலைவர்

காஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் கலவையில் மாற்றம் செய்யப்பட்டமையே என வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஷாந்த வல்பலகே இன்று ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும்

செய்திப்பணிப்பாளர்  / செய்தி ஆசிரியர் ஐயா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில்  பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிவேக நெடுஞ்சாலை  வெளியேறும் வாயிலில்  Lanka QR நடமாடும் செலுத்தல் ...

மேலும்..