May 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று(12) காலை 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது.   ‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.   சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் ...

மேலும்..

கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

‌கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.   மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இதனை அறிவித்துள்ளார்   இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

மேலும்..

அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய (12) 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் ...

மேலும்..

தீக்கிரையாக்கப்பட்ட ராஜபக்சக்களின் உணவு விடுதி

தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகத்துக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   இந்த தீ விபத்தில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ...

மேலும்..

கோட்டா – ரணில் இடையே அவசர சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்..

ஊரடங்கு நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இன்று இரவு கடுமையாக்கப்படும் ஊரடங்கு…! – சற்று முன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று  காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். முதலாம் இணைப்பு இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத ...

மேலும்..

பதவியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்! கடுமையாக எச்சரிக்கை விடுத்த மத்திய வங்கி ஆளுநர்

ட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பதவியில் இருந்து விலகுவேன் என மத்திய வாங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடித்தால், ...

மேலும்..

வன்முறைகளைத் தடுக்கும் வகையில் பொலிஸாருக்கும் துப்பாக்கியால் சுடும் உத்தரவு

நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் ...

மேலும்..

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம்

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம்

மேலும்..

நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கூட கோட்டாபய மகிந்த தேடிப்பார்க்கவில்லை! வீடுகள் எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கவலை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் நாங்கள் எப்படி எங்கு இருக்கிறோம் என்பது தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ தேடிப்பார்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தென்னிலங்கையில், கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வன்முறை ...

மேலும்..

நீடிக்கப்படுகின்றதா ஊரடங்கு…! – பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

வன்முறையை நிறுத்த துப்பாக்கிச் சூடு உத்தரவு: காவல்துறை அறிக்கை..!

நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் ...

மேலும்..

கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம்

நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்..

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பல அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு மூன்று செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   நேற்று முதல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு – ஓய்வுபெற்ற ஜெனரல் ...

மேலும்..

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே, பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும்..

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு!

https://twitter.com/GotabayaR/status/1524199165214945281?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1524199165214945281%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fgotabaya-s-call-to-the-people-of-sri-lanka-1652235870 இலங்கையர்கள் அனைவரிடமும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இன ...

மேலும்..

காலிமுகத் திடலில் போராட்டம் இன்று 33ஆவது நாளாகத் தொடர்கிறது

காலிமுகத் திடல் கோட்டா கோகம போராட்டம் இன்று 33ஆவது நாளாக நீடிக்கிறது. கடந்த 9ஆம் திகதி போராட்ட தளத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதலில் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் நேற்று (10) இரவு ஆர்ப்பாட்ட இடத்தில் ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்ட தளத்தின் ...

மேலும்..

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும்

“நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தீர்வுகாண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும்.” – இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் ...

மேலும்..

பதற்றத்தைத் தூண்டும் செயலில் முப்படையினர் ஈடுபடமாட்டார்கள்

பொதுமக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம் பொதுமக்களைத் தூண்டிவிட முயற்சி நடப்பதாக முன்னிலை சோசலிசக் ...

மேலும்..

நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீக்கிரை! (படங்கள்)

ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது! ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் காரியாலயம்(செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த ...

மேலும்..

சாதாரண தர பரீட்சை தொடங்கும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை- பரீட்சைகள் ஆணையாளர்

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகிறது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பித்தனரா? – இந்திய தூதரகம் மறுப்பு

ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதான பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடபட்டு வருகிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களது வதிவடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுடைய கோபாவேசம் அரச ...

மேலும்..

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு நேற்று வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொது சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இராணுவம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் இந்த உத்தரவு சட்டவிரோத உத்தரவு என்றும் அமைச்சரவை கலைக்கப்பட்ட ...

மேலும்..