June 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சட்டவிரோத கடற்றொழிலை முன்றாக தடைசெய்க; முல்லை சுற்றுலாக்கடற்கரையில் திரண்ட மீனவர்கள்.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறுகோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் 02.06.2022நேற்றையதினம், முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரை வளாகத்தில் தமது மீன்பிடி படகுகளை வரிசையாக நிறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சட்டவிரோத கடற்றொழில் ...

மேலும்..

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் உறுப்பினரின் அறிக்கை !

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உத்தேச யோசனை அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சட்டத்தை இரத்துச் செய்து சகலருக்கும் பொதுவான சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று செயலணியால் வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிராக எனது எதிர்ப்பை முன் வைத்து ...

மேலும்..

காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 3வயதுச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நிருபர் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் வடக்கு பகுதியில் 01/06 புதன்கிழமை பிற்பகல் காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 3வயதுச் சிறுமி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மிருசுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3வயதான கபிலன் அபிஷா என்ற மூன்று வயதுச் சிறுமி புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தனது வீட்டில் ...

மேலும்..

ரோட்டரிக் கழகத்தால் பொதுமலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்-நாயன்மார்கட்டு பாரதி சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட பொதுமலசலகூடம் 30/05 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட நிதி அனுசரணை மற்றும் கண்டி ரோட்டரிக் கழக நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட பொதுமலசலகூடத்தை கழகத்தின் மாவட்ட உதவி ...

மேலும்..

வீட்டுத்தோட்டச் செய்கைகளை வெற்றியடையச் செய்ய நடவடிக்கை எடுங்கள்-அங்கஜன் வேண்டுகோள்.\

சாவகச்சேரி நிருபர் நாட்டில் தற்போது நிலவி வருகின்ற நெருக்கடியான காலகட்டத்தில் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை வெற்றியடையச் செய்ய பிரதேச செயலக மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.01/06 புதன்கிழமை ...

மேலும்..

கல்முனையில் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் 18ஆம் திகதிக்கு பின்னரே; முதல்வர் றகீப் அதிரடி நடவடிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவுகளுக்கான புதிய வகுப்புகள், கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னரே ...

மேலும்..

எமது நாட்டு நிலைமையை கணிக்க பொருளாதார நிபுணர்கள் தேவையில்லை-பிரதேசசபைத் தவிசாளர் வாமதேவன் சுட்டிக்காட்டு.

சாவகச்சேரி நிருபர் எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கணித்துச் சொல்ல பொருளாதார நிபுணர்கள் தேவையில்லை சாதாரண மக்களுக்கே நாட்டின் எதிர்கால நிலை பற்றி நன்றாக புரிந்திருக்கும் என சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமையுரை ...

மேலும்..

செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு.

சாவகச்சேரி நிருபர் மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பு முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 30/05/2022 திங்கட்கிழமை பிற்பகல் மாதகல் நுணசை மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் தே.மகேந்திரனும்,சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனும், கௌரவ ...

மேலும்..

சர்வதேச சிலம்ப மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு வீரர்கள்!!

(கல்லடி விசேட நிருபர்) சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் மெய்வல்லுனர் போட்டியில் சிலம்பக்கலையின் பேராசான் கணபதிப்பிள்ளையின் மாணவரும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும், சர்வதேச சிலம்ப சம்மேளத்தின் இலங்கைகுரிய தலைவருமான அமரசிங்கம் குமணன் இரண்டு தங்கப்பதக்கத்தையும் அவரது மாணவர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றாடலை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு, வளங்களை பாதுகாக்க முயற்சிக்கும் – கரித்தாஸ் எகெட்!!

(கல்லடி விசேட நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்தின்பால் அதீத அக்கறையுடன் மாவட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட சமூக நலன்சார் விடயங்களை மக்களது காலடிக்கே தேடிச்சென்று உதவித்திட்டங்களை ஆற்றிவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக  மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனமானது திகழ்ந்துவருகின்றது. அந்த ...

மேலும்..

சாய்ந்தமருதில் 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனபு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனபு வழங்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை (01) ஆரம்பமானது. பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம், சமுர்த்தி ...

மேலும்..

கல்முனையில் மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை; அதிகாரிகள், விநியோகஸ்தர்கள் மாநகர சபையில் கூடித் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை விநியோகம் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து, பொது மக்கள் அவற்றை சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் பொருட்டு விநியோக நடவடிக்கைகளை ...

மேலும்..