August 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரணில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட கஜேந்திரகுமார் தரப்பு முடிவு

ரணில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முடிவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எம்மை அழைத்திருந்த நிலையிலே, ஜோசப் ஸ்டாலினும் தெற்கிலே ஜனநாயகத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்ற கைதிகளும் விடுவிக்கப்படாமல் நாங்கள் இந்த அரசாங்கத்தையோ, அதிபரையோ சந்திக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் ...

மேலும்..

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

-சி.எல்.சிசில்- இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் ...

மேலும்..

வீட்டின் கூரை மீது ஏறியதால் கூரை உடைந்து வீட்டுக்குள் வீழ்ந்த புலி: தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் சம்பவம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலியை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று (4) இரவு 11 ...

மேலும்..

CPC ஏன் நட்டத்தை சந்திக்கிறது? காரணம் சொல்லும் காஞ்சன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்வதும் ஒரு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ...

மேலும்..

ஒரு மூடை யூரியாவை 15000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்

தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக் தொன்  யூரியா பசளையை கமநல மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு கடந்த 3ஆம் திகதியுடன் ...

மேலும்..

சனத் ஜயசூரியவிற்கு புதிய பதவி

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில், சுற்றுலாத்துறை அமைச்சு தொழில்துறையை மேம்படுத்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் ...

மேலும்..

கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த ...

மேலும்..

சதொசவின் தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன நியமனம்

கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன இன்று (05) நியமிக்கப்பட்டுள்ளார். அபேவர்தன முன்னதாக தென் மாகாண சபை உறுப்பினராகக் கடமையாற்றியிருந்தார்.

மேலும்..