September 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாகன திருத்தும் இடத்தில் கடிதத்துடன் கைவிடப்பட்ட ஒரு மாத கைக்குழந்தை: பண்டாரவளையில் சம்பவம்

பண்டாரவளையில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் அருகில் நேற்று ஒரு மாத கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கடிதத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பண்டாரவளை அம்பேவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன திருத்தும் இடத்தில் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தினருடன் இன்று இரவு முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழில்நுட்ப பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ...

மேலும்..

நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல் !

நீர் மற்றும் கழிவுநீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டார். இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், ...

மேலும்..

VAT வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

வெட் வரி என்ற பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார். ...

மேலும்..

வாய்ப்பு நழுவிவிட்டது, மீண்டும் பெரமுன ஆட்சியே அமையப் போகிறது – நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய   வாய்ப்பில்லை என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்மொழிந்த கட்சிகள் கூட இன்று அதற்கு ...

மேலும்..

10 இல் 3 இலங்கையர்களின் உணவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை!

  இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் அல்லது 10 இலங்கையர்களில் மூன்று பேர் இன்று உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் குறைவான சத்துள்ள உணவை உட்கொள்வது அல்லது சமாளிக்கும் பொறிமுறையை நாடுகிறார்கள் என்று ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் சுட்டுக் கொலை

கேகாலை களுகல்ல மாவத்தையில் இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அலுவலகத்தில் கடமையாற்றும் 36 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை ஹபுதுவல பிரதேசத்தில் வசிக்கும் பெண் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை ...

மேலும்..

அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து

அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் புதிய பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைவர் ஜெயகாந்தன் ஊடாக ...

மேலும்..

தேயிலை, இறப்பர், தெங்கு,கறுவா ஏற்றுமதி மூலம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்

கடந்த வருடம் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தேயிலையின் ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ...

மேலும்..

பின்னவல சரணாலயத்தில் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்!

     பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக் குட்டிகளான திசா மற்றும் சஜ்ஜனாவின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இடம்பெற்றன. விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேம காந்த தலைமையில் இந்த பிறந்தநாள் நிகழ்வை உதவிப் பணிப்பாளர்களான ...

மேலும்..

கோதுமை மா தட்டுப்பாட்டால் பாண் விலை 300 ரூபா வரை உயரும்

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 13,500 ரூபாவாகவிருந்த 50 கிலோ கிராம் கோதுமை மா கறுப்புச் சந்தையில் 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்களான பிரிமா ...

மேலும்..