September 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க உத்தரவிட்ட ரணில்!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் கரையொதுங்கிய 230 திமிங்கலங்கள்! அதிர்ச்சியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானியா பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று (21) முதலாக பல திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைலட் திமிங்கலங்கள் எனப்படும் இந்த வகை திமிங்கலங்கள் 230 கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் 35 திமிங்கலங்கள் கடல் ...

மேலும்..

டீசல் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக இலங்கையில் தரித்து நிற்கும் டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 07 ஆம் திகதி குறித்த டீசல் கப்பல் 41​,000 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்தது. குறித்த டீசல் கப்பலுக்கான பணத்தை ...

மேலும்..

யாழ். பிரபல்ய பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்! மயங்கி விழுந்த மூன்று மாணவர்கள்: மருத்துவ அதிகாரி வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் பரிசோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தாகவும் யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார். இவ்வாறான போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது என்றும் ...

மேலும்..

மின் கட்டண உயர்வால் வழிபாட்டுத் தலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன- சஜித்

-சி.எல்.சிசில்- இன்று மின்சாரக் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவை தாம் சந்தித்த தாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சமய ஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூர மானது என்றும் தெரிவித்தார். நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள போதிலும், ...

மேலும்..

04 புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்

-சி.எல்.சிசில்- மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளு மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (20) குழு அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். இதன்படி, ஜப்பானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ...

மேலும்..

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – CPC

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது. இதேவேளை, ...

மேலும்..

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு !

நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகஸ்தரால் செயற்திறனான முறிகள் சமர்ப்பிக்கப்படாமையே இதற்கு காரணம் என லங்கா நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ...

மேலும்..

சீனத் தூதுவர்,பிரதமர் சந்திப்பு: இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்

சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்ச்சியான ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று அலரிமாளிகையில் பிரதமர் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் ...

மேலும்..

Americares நிறுவனத்தால் 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு நன்கொடை

-சி.எல்.சிசில்- நன்கொடை மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான Americares, இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருத்துவப் பொருட்களை 773,000 அமெரிக்க டொலருக்கு மேல் நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைய, தூதுவர் மஹிந்த ...

மேலும்..

2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் – ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது. இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட்        ...

மேலும்..

வனிந்து ஹசரங்க பற்றி முரளி

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வனிந்து ஹசரங்கவினால் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஒன்றைச் செய்ய முடியும் என நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கூறுகிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் ...

மேலும்..

ஜனாதிபதி ஜப்பான், பிலிப்பைன்ஸ் பயணம் செய்யவுள்ளார்

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, ஜூலை 8 அன்று, தனது 67 வயதில் தனது அரசியல் ...

மேலும்..

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுவோருக்கு அமைச்சரின் ஆலோசனை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வங்கி வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ...

மேலும்..

திரிபோஷாவில் நச்சு விவகாரம்: 4 நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு நவ.18 நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

சந்தையில் காணப்படும் திரிபோஷா பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 04 பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் நேற்று (21) ஆஜராகுமாறு உத்தரவிட்டார். கொத்தடுவ ...

மேலும்..

முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை அதிகரிக்கும் – தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தலைவர்

இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால், முட்டை மற்றும் ...

மேலும்..

டிசம்பர் வரை சந்தைக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை ...

மேலும்..

அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை!

அவுஸ்திரேலியாவினால் நன்கொடையா அளிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த அரிசி தொகை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.    600 மெட்ரிக் தொன் அரிசி இந்த நன்கொடையில் உள்ளடங்குகிறது. மேலும் ...

மேலும்..

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு அவசர மருந்துகள், மருத்துவ பொருட்கள்!

அமெரிக்காவில் இருந்து 7 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய அவசர மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ...

மேலும்..

மாணவியின் பகல் உணவாக தேங்காய்! பசியின் கோரம்!

இலங்கையின் மேல் மாகாண மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட இடைநிலைப் பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியொருவர் நேற்றைய தினம் மதிய உணவிற்காக தேங்காயை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த மாணவி பாடசாலையில் மாணவத் தலைவியாகவும் செயற்படுகிறார். குறித்த ...

மேலும்..

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஒருநாள் சேவையின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டியது அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ...

மேலும்..

10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசியா உறுதி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார். மலேசிய மனிதவள அமைச்சர் நேற்று (21) வெளியிட்ட அறிக்கையில், 10,000 தொழிலாளர்களுக்கு ...

மேலும்..

யுனெஸ்கோ தலைவரை சந்தித்து இலங்கைக்கு உதவி கேட்டார் சுசில்!

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார். இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான ...

மேலும்..

IMF உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை – ஜனாதிபதி

அண்மையில் உத்தியோகபூர்வமாக எட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டாலும், அதற்கு சர்வதேச நாணய ...

மேலும்..

ரயில் சேவையில் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு பற்றாக்குறை

புகையிரத திணைக்களத்தில் சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக திணைக்களம் கூறுகிறது. இதனால், இயக்க நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 21,000 ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டிய புகையிரத திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் மாத்திரமே இருப்பதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ...

மேலும்..