September 25, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விண்கல்லில் மோதும் நாசாவின் விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கார் வண்டி அளவான விண்கலம் ஒன்று அடுத்த வாரம் விண்கல் ஒன்றில் மோதவுள்ளது. அவ்வாறு மோதிய இடத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஹேரா விண்வெளித் திட்டம் ஆய்வு செய்யவுள்ளது. நாசாவின் இரட்டை விண்கல் திசைமாற்ற சோதனை ...

மேலும்..

மேலும் ஓர் ஏவுகணையைப் பரிசோதித்த வடகொரியா

வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது. வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக சந்தேகிப்பதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுஎஸ்எஸ் டொனால்ட் ரீகன் என்ற கப்பல் தென் கொரிய ...

மேலும்..

சோலார் சக்தியில் இயங்கும் பயணிகள் படகுச் சேவை; பத்தரமுல்லை முதல் வெள்ளவத்தை வரை 30 நிமிட பயணம்

பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனட்டி கும்புர ஆகிய பகுதிகளிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்தச் சேவை அமையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ...

மேலும்..

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை அதிகாலை (26)  ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றார். முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர்  சின்சோ அபேயின் இறுதிச் ...

மேலும்..

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் முதற் தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற  மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு ...

மேலும்..

நாட்டின் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் -பேராசிரியர் வசந்த அத்துக்கோரள

நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது என தாம் நடத்திய ...

மேலும்..

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இலங்கை ஊடக பரப்பில் கருத்தாளமிக்க மற்றும் தீர்க்கதரிசனம் கூறும் கேலிச்சித்திரங்களால் அனைவரையும் கவர்ந்திழுத்து தனக்கெனவொரு முத்திரையை பதித்த முன்னணி கேலிச்சித்திரக்கலைஞர் அஸ்வின் சுதர்சன் மறைந்து ஆறு ஆண்டுகளான நிலையில், அவரை நினைவுகூறும் முகமாக யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ...

மேலும்..

நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு

ஹிஜாப் ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ...

மேலும்..

உயர்தர மாணவர்களுக்காக அரசு வழங்கிய விசேட சலுகை! நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு அதிபர் நிதியில் இருந்து புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 ...

மேலும்..

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிறிலங்கா அரசு! அங்கீகரிக்குமாறு பிரிட்டனில் வலியுறுத்தல்

படுகொலை இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது, இதை பிரிட்டன் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளனர். லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார ...

மேலும்..

போதைக்கு அடிமையாகிய யாழ் சிறுமி! மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த தகவல்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அதேவேளை, குறித்த சிறுமி 08 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.   தாயார் வழங்கிய தகவல் மேலும், சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் ...

மேலும்..

இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இத்தாலிய பொது தேர்தல் - 2022 இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     இத்தாலி நேரப்படி இன்று ...

மேலும்..

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக கிடைக்கவுள்ள வாக்குகள்! ராஜதந்திர தரப்புத் தகவல்

11 வாக்குகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா ராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் ...

மேலும்..

ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்..!

பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற மார்பிள் பலகையில், அவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னர், தாயார் முதலாம் எலிசபெத் மற்றும் கடந்த ஆண்டு காலமான கணவர் பிலிப் ...

மேலும்..

“தியாகதீபத்திற்காக ஒரு துளி குருதி!” எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் இடம்பெற்று வருகிறது.

தியாகதீபம் திலீபன் நினைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை முதல் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு அருகில் “தியாகதீபத்திற்காக ஒரு துளி குருதி!” எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம் இடம்பெற்று வருகிறது. மேலும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான சித்திரப்போட்டியும் இடம்பெற்று ...

மேலும்..

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பில் ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.   அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் ...

மேலும்..

ஐ.நா. பிரதிநிதி இன்று இலங்கை விஜயம்

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பிலுள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்துக் ...

மேலும்..

சட்டவிரோதமாககொண்டு செல்லப்பட்டமரக்குற்றிகள்சாவகச்சேரிப் பொலிஸாரால் மீட்கப்பட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரிப் பொலிஸாரால் 25/09 ஞாயிற்றுக்கிழமை காலை சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 20இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்கப்பட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். டிப்பர் வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மேல் கற்களை பரவி மரக்குற்றிகளை எடுத்து வந்த ...

மேலும்..

வழக்கை கைவிடுங்கள் -அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஹாமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை, அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் 5.875 சதவீத சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் $250 மில்லியனுக்கும் அதிகமான ...

மேலும்..

அதிகரிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்! மோசமடையும் நெருக்கடி நிலைமை

இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக ...

மேலும்..

இலங்கையில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா தோட்டம்! முன்வைக்கப்படவுள்ள தீர்மானம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கஞ்சா பயிர்செய்கை தொடர்பான யோசனை ஒன்றை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளது. குறித்த பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க ...

மேலும்..

புடினை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் -வெளியான பரபரப்பு தகவல்

உக்ரைனில் அண்மைய நாட்களாக ரஷ்ய படை சந்தித்துவரும் இழப்பை அடுத்து கடந்த புதன்கிழமை ரஷ்யஅதிபர் புடின் ஆற்றிய உரையில், இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான ரஷ்யாவின் முதல் இராணுவ அணிதிரட்டல் குறித்து அறிவித்தார். மேலும் மேற்கத்திய நாடுகள் தனது நாட்டை அழிக்க சதி ...

மேலும்..

நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல்

நீண்ட காலமாக பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகமூர்த்தி -முரளிதரன்(கருணா) தற்போது பொதுவெளியில் வந்து கோட்டாபயவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். எவரது ஆலோசனையையும் கேட்காமல் அவர் எடுத்த முடிவால் நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளதாகவும் நாடு தற்போது எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

மகிந்த தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் -வெளியானது அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூட்டம்   கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

சிறிலங்கா இராணுவத்திற்கு விதிக்கப்பட்டது தடை

இராணுவத்திற்கு  தடை சிறிலங்கா இராணுவ வீரர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான புகைப்படத்தை எடுத்து சமுக வலைத்தளங்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். அத்தகைய இராணுவத்தை தற்போதைய ஆட்சியாளர்களால் பராமரிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி ...

மேலும்..

மக்களின் மீட்சிக்கு வழிவகுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு! ஐநாவில் அலிசப்ரி உரை

இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (25) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் உரையாற்றிய ...

மேலும்..

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை! வெளியாகியுள்ள சுற்றறிக்கை

சுற்றறிக்கை அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண ...

மேலும்..