September 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு துறைமுக நகர வர்த்தமானி உரிமக் கட்டணத்தை அறிவித்துள்ளது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் விதிமுறைகள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. மே 2022 இல், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டது. காமினி மாரப்பன தலைமையிலான ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏழு ...

மேலும்..

எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் தொடர்பான அறிவிப்பு

நேற்று வந்த பெற்றோல் கப்பலுடன் மற்றுமொரு கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், 10 நாட்களுக்கு முன்னர் வந்த மற்றுமொரு டீசல் கப்பலுக்கு அடுத்த வாரத்தில் பணம் செலுத்துவோம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ...

மேலும்..

சஜித் தவம் செய்யும் தலைவர் -தமிதா அபேரத்ன

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாத காரணத்தினால் அதனை ஏற்கவில்லை என்பது தற்போது தான் புரிகிறது என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததன் பின்னர் அதனை உறுதிப்படுத்தியதாக அவர் ...

மேலும்..

இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஒகஸ்ட் மாதம் ...

மேலும்..

சமூக பாதுகாப்பு வரியால் அடுத்த மாதம் முதல் அரிசி விலை அதிகரிக்குமா?

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் ...

மேலும்..

நாளை மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி ஏற்பாடு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) நாளை மெய்நிகர் வேலை கண்காட்சியை நடத்தவுள்ளது. SLBFE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்து மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. மெய்நிகர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காட்சி பிற்பகல் 02.00 மணி முதல் நடைபெறவுள்ளது.  

மேலும்..

யாழ். போதனா வைத்தியசாலையில் உலக இருதய தினம் அனுஷ்டிப்பு

மேலும்..

“ஆசிரியர் தினத்துக்கு பணம் ஏன் செலுத்தவில்லை?” -மாணவி மீது அதிபர் தாக்குதல்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்திய ...

மேலும்..

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதிதிறந்துவைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 9மணியளவில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் வாசுகி ...

மேலும்..

ஜனாதிபதி ஒரு நகைச்சுவையாளர்!

தற்போதைய ஜனாதிபதி ​ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்ச மக்களையும் தள்ளாடும் பாலத்தின் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ராஜபக்சர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுமே தள்ளாடும் பாலத்தை தற்போது கடந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ...

மேலும்..

ராணி எலிசபெத் மறைந்த நிலையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முக்கிய மாற்றம்

  மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில் உலகில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்தானியா பவுண்ட் கரன்சியில் 3ஆம் சார்லஸ் முகம் எப்போது வரும் என்பதற்காக விடை தற்போது கிடைத்துள்ளது. தற்போது 3ஆம் சார்லஸ் முடிசூட்டப்பட்டு மன்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் ‘God Save ...

மேலும்..

இலங்கையில் குழந்தைகளின் நிறை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

நிறை குறைந்த குழந்தைகள் இலங்கையில் எதிர்காலத்தில் குழந்தைகள் நிறை குறைந்தவர்களாக இருக்கலாம் என்பதை எதிர்பார்க்கலாம் என குடும்ப நல சுகாதாரத்துறை தலைவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிக எடை குறைந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ...

மேலும்..

இலங்கையில் பசியால் வாடும் குடும்பங்கள் – வெளியான அதிர்ச்சிகர தகவல்

  பசியால் வாடும் பத்தில் நான்கு குடும்பங்கள் இலங்கையில் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு காரணமாக உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டம் அபாய ...

மேலும்..

விபத்தில் சிக்கிய 21 வயது இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த ...

மேலும்..

மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்கள் துஸ்பிரயோகம்! ஆங்கில ஆசிரியர் கைது

திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் சந்தேகநபரை நேற்றய ...

மேலும்..

ரணிலுக்கு நடந்தது என்ன -குழப்பத்தில் முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர்

நாட்டு மக்களின் மனித உரிமைகளை மீறி செயற்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ...

மேலும்..

இன்று முதல் தடவையாக கூடும் தேசிய சபை

தேசிய சபை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான ...

மேலும்..

அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம்

தம்முடன் இணைந்து கொண்டால் பெரும் தொகை பணம் வழங்கப்படுமென அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். அவர்களின் மடியில் தான் ஒருபோதும் விழமாட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். போராட்டத்தின் இலக்கு   ஆனால் நாளைய போராட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றும் ஒருவருடன் அல்லது ஒரு ...

மேலும்..

இலங்கைக்கு 1.5 மில்லியன் யூரோக்கள்

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின் உடனடித் தேவைகளான உணவு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்றவற்றுக்கு இந்தப் ...

மேலும்..

மார்ச்சில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கலாம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என ...

மேலும்..

கஜிமாவத்தை தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனையில் விசேட வேலைத்திட்டம்!

கொழும்பு, பாலத்துறை – கஜிமாவத்தை தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் நேற்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி 71 வீடுகளில் ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை

இன்றும்(29), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் ...

மேலும்..