January 9, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனியார் வகுப்பில் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லங்காதீபவின் தகவலின்படி, சந்தேகநபர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். சந்தேக நபர் ...

மேலும்..

கனடா இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்குகிறது..

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், கனடா 3 மில்லியன் டொலர்களை (சுமார் 817 மில்லியன் ரூபா) வழங்குவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ...

மேலும்..

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் நல்லூரில் திறப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் காலை 9.00 மணியளவில் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ...

மேலும்..

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பல வைத்தியசாலைகளின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவிற்கு ஏற்ற வேதனம் அல்லது கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை, பெற்றுக்கொண்டுள்ள வங்கி கடனுக்கு வட்டி வீதத்தை அதிகரித்தமை மற்றும் புதிய ஆட்சேர்ப்பு ...

மேலும்..

இலங்கையின் 75ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு நாணயக்குற்றி,முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதியான விசேட நினைவு நாணயமும் தபால் திணைக்களத்தினால் இரண்டு நினைவு முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளன. மறைந்த தலைவர்களான டி.எஸ்.சேனநாயக்கா, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே ...

மேலும்..

பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஐதேக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி ...

மேலும்..

இலங்கைக்கான புதிய UNDP வதிவிடப் பிரதிநிதி அலி சப்ரியை சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான (UNDP) இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா இன்று தனது நற்சான்றிதழ்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்துள்ளார். இலங்கையில் அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர், குபோடா பூட்டானில் உள்ள UNDP இல் வதிவிடப் பிரதிநிதியாக ...

மேலும்..

யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இன்று அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை 10 மணியளவில் யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ் ...

மேலும்..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் போராட்டம் தொடர்கிறது..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 5 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றுவருகிறது. "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு ...

மேலும்..

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த ...

மேலும்..

முச்சக்கரவண்டியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார். முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை லிதுல நகரசபை ...

மேலும்..

இந்த வயசுலயும் இளசுகளின் தூக்கத்தை கலைக்கும் கிரன்..!{படங்கள்}

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், ...

மேலும்..

விபச்சாரத்தில் ஈடுபட காரணத்தை சொன்ன யாழ் வவுனியா அழகிகளின் சோகம்..!

எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைதான யாழ், வவுனியா யுவதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 இளம் யுவதிகள் அண்மையில் பொலிஸ் சிறுவர் ...

மேலும்..

ஒரு மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்…

சுமன்) மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு (ஈரோஸ்) இருக்கின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார். ஈழவர் ஜனநாயக முன்னணி ...

மேலும்..

திருவாசக முற்றோதல் இறுதி நாளில் ஒதுவார்களுக்கு பஜனா வழி நூல் அன்பளிப்பாக வழங்கி வைப்பு…

திருவாசக முற்றோதல் நிகழ்வானது 08/01/2023 நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச ஒதுவார்கள், ஆலய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட ஒதுவார்களுக்கு ...

மேலும்..

உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு..

உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு கடந்த வருட புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவரின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது நண்பர்கள் ...

மேலும்..

சந்திரிக்கா தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான ...

மேலும்..

மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு- பழனி திகாம்பரம் தெரிவிப்பு !

" நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா ...

மேலும்..

24 மணி நேரத்தில் 22 வயது இளைஞன் உட்பட 5 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 5 வீதி விபத்துகளில் இளைஞர் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி ...

மேலும்..

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு – நான்கு பேர் கைது

நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை 12ம் இலக்க தேயிலை மலை காணிப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளாரென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவமானது நேற்று (08) ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்க செயலாளர் ஹரிகரன் கோரிக்கை

எமது தமிழ் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத் தமிழ் நன்கொடையாளர்கள் அங்கு வியர்வைசிந்தி உழைக்கின்ற பணங்களை, தம் உறவுகளின் உயிர்காப்புக்காக சுகாதாரத் துறைக்கு வழங்குகின்றபோது அதனை நேரடியாக எமது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு ஆற்றவேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ...

மேலும்..

கல்வி அமைச்சின் புதிய திட்டம்!

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, ...

மேலும்..

சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழகத்தினரால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உதவி!

சுன்னாகம். பாரம்பரிய றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை (24./12/2022)(சனிக்கிழமை) வழங்கிவைத்தனர். இந்த மருந்துகள் கையளிக்கும் ...

மேலும்..