February 3, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை 75 வது சுதந்திர தினத்தைதமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் வடக்கு, ...

மேலும்..

சஜித்தின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை,இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும்,கண்ணீரும், வியர்வையுமான பயணமாகும் என்பதுடன்,இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை ...

மேலும்..

இன்றையதினத்தை மக்கள் கறுப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்!

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா 2023

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 29 2023 அன்று ஒட்டாவா St. Elias  மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈழத்தழிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட  இன அழிப்பு நடவடிக்கைகளுக்கான நிரந்தர ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 4 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகளுக்கு ...

மேலும்..

காணி விடுவிப்பு நிகழ்வைப் புறக்கணிக்கும் விக்கி!

யாழ்., வலிகாமம் வடக்கில் இன்று 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் நிகழ்வைத்தான் புறக்கணிக்கின்றார் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ”மிகத் தாமதமாக மிகச் சொற்பமாக” காணிகள் விடுவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் நிகழ்வைப் புறக்கணிக்கின்றார் என்று ...

மேலும்..

தென்னிலங்கையினர் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஸ்ரீகாந்தா

“தென்னிலங்கையிலே மனித உரிமை மீறல், இலஞ்சம், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஜனநாயகத் தரப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் பேரணி நாளை ஆரம்பம்!

அரசின் அடக்குமுறையை எதிர்த்தும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி இடம்பெறும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். தமிழர்களின் கரிநாளான இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் இந்தப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும். நான்கு நாள் வாகனப் ...

மேலும்..

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன்

பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பானது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள்கலந்துக் கொண்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் வீட்டிலுள்ள முக்கால்வாசி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஜனனி எதிர்பாராத விதமாக பிக் பாஸ் ...

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள்

கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன. கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன. கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில் ...

மேலும்..

ஜே.ஆர் ஜெயவர்தனா செய்யாததை அவரது மருமகன் ரணில் செய்ய முயல்கிறார் – குற்றச்சாட்டு!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர் ஜெயவர்தனாவே முழுமையாக நடைமுறைப்படுத்த முயலாத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும், ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். ...

மேலும்..

எழுச்சிப் பேரணி ஆரம்பிப்பது தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

வடக்கில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது. வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எழுச்சிப் பேரணி ஆரம்பிப்பது ...

மேலும்..

மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்- பசில் ராஜபக்க்ஷ

மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார். எனவே அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு பசில் ...

மேலும்..

”பிரிந்து போட்டியிட்டாலும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்போம்”- மாவை சேனாதிராஜா

உள்ளூரட்சி தேர்தலின் பின்னர் வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு  ஆட்சியினை அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இலங்கை தமிழரசு ...

மேலும்..

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை

இலங்கையின் சுதந்திரதினமான 4ஆம் திகதியை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நாளை காலை 10.00 மணிக்கு யாழ்.பல்கலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்படும் “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய” ...

மேலும்..

மாத்தளையில் இ.தொ.காவுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபைகளில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.   இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா, சிவஞானம், மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர் பிரகாஷ், அம்பங்கங்க ...

மேலும்..

சுதந்திர தினத்தைப் பயன்படுத்தி இணைய மோசடி: Fact Crescendo Sri Lanka எச்சரிக்கை

சுயாதீன உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளமான Fact Crescendo Sri Lanka இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய சமூக ஊடகங்களில் போலியான இணையத் தரவு மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது. Fact Crescendo Sri Lanka ஒரு டுவிட்டர் செய்தியில், ‘இலவச தரவு’ ...

மேலும்..

நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்..

பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு மக்களின் கறுப்பு தினமாக கருதி வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக ஹர்த்தாலை அமுல்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் ...

மேலும்..

நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை தெரிவிப்பு

நீர் மின் உற்பத்திக்காக வௌியிடப்பட வேண்டிய நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது. எதிர்ப்பார்த்த மழை பெய்யாததால் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தேவை எனவும் மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும்..

கரு ஜயசூரியவிற்கு “ஶ்ரீலங்காபிமான்ய விருது”

ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் "ஶ்ரீலங்காபிமான்ய விருது" இன்று (03) தேசபந்து கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விருது கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2023 ஆம் ...

மேலும்..

மக்களின் காலடிக்குச் சென்று சேவை செய்ய வேண்டும்- சஜித் பிரேமதாஸ

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற நடைமுறையை மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களையும், முன்மொழிவுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போது, ​எந்த வேலையும் செய்யாமல் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தம்பட்டம் அடிக்கும் சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் ...

மேலும்..

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் நீதிமன்ற மதிலை தாண்டி தப்பி ஓடிய சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன்; நேற்று ஒருவரை கைது செய்த பொலிசார் அவரை சம்பவ தினமான ...

மேலும்..

சுதந்திர தின வைபவத்தை சஜித் பிரேமதாச நிராகரிப்பு!

இந்த வருட சுதந்திர தின வைபவத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி ...

மேலும்..

நாட்டையும் ஆள முடியும் என்ற விழிப்புணர்வு எமது பெண்களிடம் மீண்டும் மலர வேண்டும். = தமிழ் அரசு வேட்பாளர் கலைவாணி தெரிவிப்பு.

வீட்டை மாத்திரம் அல்ல நாட்டையும் எமது பெண்கள் ஆள முடியும் என்று எமது பெண்கள் மீண்டும் புத்தெழுச்சி பெறுதல் வேண்டும் என்று எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு 02 ஆம் வட்டாரத்தில் தமிழ் அரசு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்  ...

மேலும்..

நுவரெலியா கந்தபளையில் மகனால் தந்தை கொலை

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் ...

மேலும்..

பொகவந்தலாவையில் கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு பறிமுதல்

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02.02.2023) பறிமுதல் செய்யப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் ...

மேலும்..